சிலம்பப் போட்டி நிகழ்ச்சியின் போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
சம்ஸ்க்ருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக மாணவர்கள் இடையே சிலம்பப் போட்டி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கத் தலைவர் மாருதி கண. மோகன்ராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செயலாளர் ஏஎம்.எஸ்.இப்ராஹிம்பாபு வாழ்க்கை வழங்கும்போது வருங்காலத்தில் மாணவச் செல்வங்கள் அரசின் அறிவுறுத்தல் படி வாகன உரிமத்தின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார் மேலும்
வாகன காப்பீடு உயிர்க்காப்பீடு ஆகியவைகள் ஏன் எதற்கு எடுக்க வேண்டும் என்பது குறித்த மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் துணைத் தலைவருமான சேட் (எ)அப்துல் ரஹ்மான் மற்றும் குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அழகப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.
இளைய தலைமுறையினர் சாலை விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்த்தல் வேண்டும் என்றும், ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
விழாவின் முன்னதாக வருகை தந்த அனைவரையும் பள்ளி யின் நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் வரவேற்றார். பள்ளி மாணவர் சூர்யா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர்