சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ‘மார்கழி மகிமை’ பஜனை நிகழ்ச்சி திருவொற்றியூரில் தனியார் பள்ளி சார்பில் நடைபெற்றது
‘
திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் ‘மார்கழி மகிமை’ பஜனை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாட வீதியில் உள்ள புஷ்பம் பழனிசாமி திருமண மண்டபத்திலிருந்து தொடங்கிய பஜனை ஊர்வலம் வடக்குமாட வீதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சன்னதி தெரு வழியாக ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயிலை அடைந்தது. இங்குள்ள ஸ்வடிவுடையம்மன் கோயிலில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை மாணவர்கள் பாடினர்.
மேலும் மாணவர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளும்,. சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் “மார்கழியின் மகிமை” என்ற தலைப்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு திருவொற்றியூர் நல சங்கத் தலைவர் தொழிலதிபர் ஜி.வரதராஜன் பாராட்டு மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஜெ.ரங்கநாதன், திருவொற்றியூர் நல சங்கத் தலைவர் என்.துரைராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.டி.சங்கர், எஸ்.செல்வம், பள்ளியின் நிர்வாக இயக்குநர் அவந்திகா ஹரிஹரன், முதல்வர்கள் மு.மலர்விழி, சந்திரகலா மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.