Close
நவம்பர் 24, 2024 10:33 மணி

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் மார்கழி திருப்பாவை உற்சவம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மார்கழி திருப்பாவை உற்சவம் நடைபெற்றது

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மார்கழி திருப்பாவை உற்சவம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய  மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த  ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மார்கழி திருப்பாவை உற்சவம்  நடைபெற்றது

மார்கழி  முதல் நாளிலிருந்து தினமும் மாலையில் நடக்கின்றது  திருப்பாவை உற்சவ   நிகழ்வில் பக்தி சொற்பொழிவாளர் சுந்தர்ராஜன் பக்தி சொற்பொழிவும்  திருப்பாவை பாடல்களையும் பாடினர்

பின்னர் அவர் கூறியதாவது:   மாதங்களிலேயே மிக உயர்ந்த மாதமாக கருதப்படுவது மார்கழியின் 30 நாட்களும்  பூஜை செய்தால் நம்முடைய பிரச்னைகள் அனைத்தும் தீரும், ஆனந்தம் பிறக்கும்

 மார்கழியின் 30 நாட்களும் திருப்பாவை பாடல்களை பாடி, வெண் பொங்கல் படைத்து வழிபட்டு முடித்த பிறகு, பொங்கல் அன்று காலையிலும் திருப்பாவை பாடல்களை பாடி ஆண்டாளை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்க வேண்டும்.

அன்று காலை வீட்டில் விளக்கேற்றி வைத்து, ” ஆண்டாள் தாயே, மார்கழியின் 30 நாட்களும் எங்களுடைய வீட்டிற்கு வந்து, நாங்கள் செய்த பூஜை, வழிபாடுகளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. தெரிவித்தும், தெரியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால் அவற்றை மன்னித்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.

எங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வைத்து, எங்களின் வீட்டில் மகிழ்ச்சி பொங்க செய்ய வேண்டும். பெருமாளின் அருளும், அனைத்து விதமான செல்வங்களும், இன்பங்களும் எங்களுக்கு கிடைக்க நீ அருள் செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங் களை நாமும் பாடி வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங் களும் தீருவதுடன், வாழ்வில் அளவில்லாத உச்சபட்ச இன்பங் களை பெற முடியும் என்று கூறினார்.

நிகழ்வில்  திருக்கோகர்ணம் ஸ்ரீநிவாசன் அனுமன் திருச்சபை யினர்,  திருப்பதி தேவஸ்தான ஆழ்வார்கள் திவ்ய பிரபந்த செயல் திட்ட வெங்கடேசராமானுசதாசன் ஆன்மிக நெறியா ளர்  ஆனந்தன்.உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர். அனைவ ருக்கும்  பிரசாதம்   வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அனுமன் திருச்சபை நிர்வாகிகள் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top