Close
செப்டம்பர் 28, 2024 5:29 மணி

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழில் சங்கத்தினர்

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதாக தொழில்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள்  சிரமத்தைச் சந்திக்க நேரிட்டது.

கோரிக்கைகள்: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 100 மாதங்களாக வழங்கப் படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். 15 -ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். வாரிசு பணி நியமனத்தை மேற்கொள்ள வேண்டும்  என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன.

இதுதொடர்பாக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஜன.9 முதல் ஏடிபி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. பாதிக்மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

அனுபவமில்லாத தொழிலாளர்களைக் கொண்டு இயக்கும் விபரீதம்…

இந்நிலையில், போக்குவரத்துக்கழக நிர்வாகம் ஓய்வு பெற்ற ஊழியர்களையும், பேருந்துகளை ஓட்டி அனுபவம் இல்லாத கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்களைக் கொண்டும் சில வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த விபரீத முடிவால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களால் போக்குவரத் துக்கழகத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும்  நிலை உருவாகும்.

மேலும், ஒரு நாளைக்கு ஒரு வழித்தடத்தில் 6 முதல் 8 முறை சென்றுவரக்கூடிய பேருந்துகளை ஒன்று அல்லது இரண்டு முறை இயக்கிவிட்டு, அதே தொழிலாளர்களை வேறு வழித் தடத்தில் ஒன்றிரண்டு முறை இயக்க வைத்து அதிகமான வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டதாக கணக்குக் காண்பிக்கப்படுவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்ள் புதுக்கோட்டை பணிமனை முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற் சங்க மண்டலப் பொதுச் செயலாளர் எஸ்.செபஸ்தியான்,  சிஐடியு பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன்,  ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.கணேசன், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் இளங்கோவன், லோகநாதன், திருநாவுக்கரசு, வேணுகோபால், சிஐடியு மாவட்டத் தலைவர்  கே.முகமதலி ஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top