Close
நவம்பர் 21, 2024 6:20 மணி

கூரியர் மூலமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை

புதுக்கோட்டை

கூரியர் வழி கஞ்சா கடத்திய 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு

ஆந்திராவிலிருந்து  கூரியர் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஐதராபாத்தில் இருந்து தனியார் கூரியர் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக மதுரையிலுள்ள போதைப்பொருள் தடுப்பு சுங்க போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், திருச்சியிலுள்ள கூரியர் நிறுவனத்தில் கடந்த 2021 மார்ச் மாதம் விசாரணை நடத்தினர்
அப்போது 201 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தொடர் புலன்விசாரணையில் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மாயபாண்டி (33), பாண்டி (38), திருச்சியைச் சேர்ந்த சசிகுமார் (35) ஆகிய  3 பேரும்  கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டையிலுள்ள அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில்,  நீதிபதி பாபுலால், குற்றவாளிகள் 3 பேருக்கும்  தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 1.40 லட்சம் அபராதமும் விதித்து நேற்று  தீர்ப்பளித்தார்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top