Close
நவம்பர் 22, 2024 7:08 காலை

கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

திருமயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக ஒன்றிய செயலர் ஆ. வீரமணி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமயம் பேருந்து நிலையம் அருகே திருமயம் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமை வகித்தார்.

தொகுதி துணை செயலாளர் சா. ரமேஷ், ஒன்றிய பொருளாளர் செல்வகுமார், மாணவரணி செயலர் வே. நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கிமாவட்டச் செயலாளர் கரு. வெள்ளைநஞ்சன் மாவட்டச் செயலாளர் இளமதிஅசோகன் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் துணை செயலாளர் மா.சி. திலீபன் ராஜா மண்டல செயலாளர் சின்ன பழகு மண்டல செயலாளர் திருமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

புதுக்கோட்டை
திருமயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக மாவட்டச்செயலர் கரு. வெள்ளைநெஞ்சன்

கோரிக்கைகள்: திருமயத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் . திருமயத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பேருந்து பணிமனையை உடனடியாக தொடங்க வேண்டும். திருமயம் ஒன்றியத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வரும் கல் குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

காட்டுபாவா பள்ளிவாசலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் . சவேரியார் புரத்தில் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல வேண்டும். திருமயம் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள பாப்பாத்தி ஊருணி முதல் துளையானூர் வரை உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும்.

தலித் மக்களின் பட்டா நிலத்தை அபகரிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து தலித் மக்களின் நில உரிமையை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா விவரங்களை வருவாய் துறை கணக்கில் பதிவு செய்து பாதுகாத்திட வேண்டும். என்பன உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

.ஒன்றிய துணைச் செயலாளர் கணபதி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பரமசிவம், ஒன்றிய மகளிரணி கலா பைரவன் மற்றும் ஒன்றிய மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
(பட விளக்கம்- திருமயத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top