Close
நவம்பர் 22, 2024 2:58 காலை

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 200 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இவர்களில், கோட்டைப்பட்டினம் யாசிர் அராபத் என்பவருக் குச் சொந்தமான படகில், வீரப்பன் மகன் சங்கர் (35), பஷீர்அலி மகன் பாதுஷா (36), கணேசன் மகன் குமார் (50), தேவதாஸ் மகன் முருகன் (48),  சாம்ராஜ் என்பவருக்குச் .சொந்தமான படகில், ஆரோக்கியராஜ் மகன் சாம்ராஜ் (35), வீரன் மகன் பாலா (34), நாகலிங்கம் மகன் அஜித் (22).
கிருஷ்ணன் மகன் துரை (35), ஆரோக்கியதாஸ் என்பவருக்குச் சொந்தமான படகில் ஜான் கென்னடி மகன் ஜாக்சன் (32), வெள்ளைச்சாமி மகன் நாகசாமி (51), ரத்தினம் மகன் பாலகிருஷ்ணன் (48), ஜெபமாலை மகன் ஜெயராஜ் (55) ஆகிய 12 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களைக் கைது செய்தனர்.
காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு இரவு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 2024ஆம் ஆண்டின் முதல் சம்பவமாக, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top