Close
செப்டம்பர் 20, 2024 7:25 காலை

உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, இளகிய மனம் படைத்தவர்கள்  இந்தியாவில் முதலிடம் யார் தெரியுமா?

தேனி

தேனி விளையாட்டு பயிற்சியாளர் வழக்கறிஞர் செல்வம்.

உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, இளகிய மனம் படைத்தவர்கள்  இந்தியாவில் முதலிடம் யார் தெரியுமா?

இந்திய அளவில் உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, இளகிய மனம் படைத்தவர்களின் வரிசையில் தமிழக மாணவ, மாணவிகள் தான் முதலிடம் பெற்றுள்ளனர்.

தேனியில் யு.எஸ்.ஏ., கிளப் மற்றும் வின்சன் ஹாக்கி கிளப் நிறுவனர் செல்வம். (வழக்கறிஞராக பணிபுரியும் இவர், தேனி நகராட்சி துணைத்தலைவராகவும் இருந்து வருகிறார்.) இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த கிளப்கள் மூலம் தினமும் 120 முதல் 150 மாணவ, மாணவிகளுக்கு இலவச விளையாட்டு  பயிற்சி வழங்கி வருகிறார்.

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 2 மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் பயிற்சிகள் நடக்கிறது. இங்கு பயிற்சி பெற்ற ஆறு பேர் கடந்த 2022ம் ஆண்டு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு நான்கு பேர் சேர்ந்துள்ளனர். சிலர் அரசு பணிக்கும் சென்றுள்ளனர். இந்த ஆண்டு இன்னும் ஆறு பேர் வரை சேர வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக இங்கு பயிற்சி பெறுபவர்கள் கல்லுாரி படிப்பினை முடித்து விட்டு, இந்திய பாதுகாப்புத்துறை, போலீஸ்துறைக ளின் பணிகளில் அதிகம் சேருகின்றனர். சிலர் அக்னிபாத் திலும் சேர்ந்துள்ளனர்.

இங்கு பயிற்சி எடுத்தவர்கள் மாநில போட்டிகளில் வெற்றி பெற்று அகில இந்திய போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் பலர் விளையாட்டு வீரர்களுக் கான தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்றுள்ளனர். இந்த அங்கீகார சான்றுக்கு அரசு பணிகளில் தனி ஒதுக்கீடு உள்ளதும், கூடுதல் மதிப்பெண்கள் உள்ளதும் அனைவருக்கும் தெரியும். தற்போதும் இலவசமாக விளையாட்டு பயிற்சி பெறுபவர்களில் பலர் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

இங்கு பயிற்சி பெறுபவர்கள் மாநில, அகில இந்திய போட்டி களில் பங்கேற்க செல்லும் செலவுகளை இந்த கிளப் நிர்வாக மே ஏற்றுக் கொள்கிறது. இதற்காக ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவிடுகின்றனர். (இது தவிர நலிந்தோர், மூதாட்டிகள் பலர் மாதாந்திர உதவித்தொகை பெறுகின்றனர். இது தனிக்கதை).

 கிளப் நிறுவனர் வழக்கறிஞர் செல்வம் கூறியதாவது: அகில உலக அளவில் ஆசியர்கள் அதிலும் குறிப்பாக இந்தியர்கள் உடல் திறன், நோய் எதிர்ப்பு திறனில் முதலிடம் பெற்றவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த கொரோனா காலங்களில் கூட இந்தியர்களின் நோய் எதிர்ப்பு திறன்,  உடல் திறன் தான் பலரை காப்பாற்றியது.

இதற்கு இந்தியர்களின் பல நுாற்றாண்டுகள் கடந்து வந்த உணவுமுறையும், வாழ்வியல் முறையும் ஒரு முக்கிய காரணம். இந்தியா அளவில் யார் முதலிடம் தெரியுமா? தமிழர்கள் தான். பொதுவாகவே இந்திய பாதுகாப்புத்துறை, சீருடை பணிகளில் தமிழர்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவமே இதனை உணர்த்தும். தற்போது அறிவியல் பூர்வமாகவும் உணர்ந்துள்ளோம்.

இது தொடர்பான பல்வேறு அறிவியல் முடிவுகள் வெளியாகி உள்ளன. நாம் உடல் வலு, நோய் எதிர்ப்பு சக்கி அதிகம் கொண்டவர்களாக இருந்தாலும், மென்மையான மனம் கொண்டவர்கள் என்பதால் எந்த ஒரு பெரிய அளவிலான வன்முறை அல்லது உடல் திறனை நிரூபிக்கும் சம்பவங்களில் தடம் பதிக்கவில்லை.

பாண்டியர், சேரர், சோழர், நாயக்கர், பல்லவர் காலத்து போர்களை பற்றி படித்தாலே தமிழர்களின் உடல் வலிமை பற்றி நமக்கு தெரியும். இவ்வளவு வலிமை மிகுந்த நம்மிடம் மென்மையான மனமும், வலிமையான மனமும் இருப்பது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் தான். இதனை எனது மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைப்பேன்.

நான் சொல்லும் வரை அவர்களுக்கே தங்களது உடல் திறன் பற்றி நம்பிக்கையில்லாமல் தான் இருப்பார்கள். நான் எடுத்துச் சொல்லி, பயிற்சி கொடுத்த பின்னர் அவர்கள் விளையாட்டுத்துறையில் மிளிரத் தொடங்குவார்கள். இப்படி பல சாதனையாளர்களை உருவாக்கி உள்ளோம். இந்த சாதனையார்களை பற்றி சொன்னால் பல மணி நேரம் பேச வேண்டியிருக்கும்.

இறைவன் தமிழர்களுக்கு கொடுத்த உடல் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, நெகிழ்வான மனதை நாம் முறையாக பயன்படுத்தி வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம். அந்த உடற்பயிற்சிக்கு விளையாட்டு பயிற்சி மிக, மிக அவசியம். இதனால் தான் நான் விளையாட்டுத்துறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த கடும் முயற்சிகள் எடுத்து வருகிறேன்.

என்னை சுற்றிலும் நல்ல நண்பர்கள் இருப்பதால், எனது இந்த பயிற்சி பயணம் மிகவும் எளிதாக செல்கிறது. நிச்சயம் தமிழக அளவில் இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நானும் எனது நண்பர்களும் பெரும் வெற்றி பெறுவோம். அதற்கான திட்டங்களை நாங்கள் தற்போது வகுத்து வருகிறோம் என்றார் செல்வம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top