Close
நவம்பர் 24, 2024 6:40 காலை

புத்தகம் அறிவோம்.. நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- டேல் கார்னகி

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படி என்பதை டேல் கார்னகி எழுதிய நூல் இது.

நூல்  இரத்தினச் சுருக்கமாய் …
1 சுமுகமான மனித உறவுகளை பெற வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

2. ஒவ்வொர் அத்தியாயத்தையும் குறைந்தது இரண்டு முறை படியுங்கள்.

3. படித்துக் கொண்டிருக்கையில், அவ்வப்போது நிறுத்தி, ஒவ்வொ பரிந்துரையையும் எவ்வாறுநடைமுறைப்படுத்தலாம் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

4. உங்களுக்கு பிடித்தமான ஒவ்வொரு முக்கியமான கருத்தையும் அடிக்கோடிடுங்கள்.

5. இப்புத்தகத்தை ஒவ்வொரு மாதமும் மறுபரிசீலனை செய்யுங்கள்.

6. உங்கள் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு கையேடாக இப்புத்தகத்தை பயன்படுத்துங்கள்.

7. இக்கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மீறும்போது உங்களை கையும் களவுமாகப் பிடிக்கும் உங்கள் நண்பர்கள் எவருக்கேனும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாக அவர்களுடன் விளையாட்டாக ஒரு உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இது கற்றலை சுவாரஸ்யமாக்கும்.

8.ஒவ்வொரு வாரமும் உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணியுங்கள்.என்ன தவறுகளை செய்துள்ளீர், எதில் முன்னேறியுள்ளீர்கள், என்னென்ன படிப்பினைகளைக் கற்றுள்ளீர்கள் என்று அலசுங்கள்.

9. இக் கொள்கைகளை எப்படி, எப்போது நடைமுறைப்படுத்தி யுள்ளீர்கள் என்பதை இப்புத்தகத்தின் இறுதியில் உங்களுக் காக விடப்பட்டுள்ள பக்கங்களில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்புத்தகத்தை திறம்பட உபயோகிக்க ஒன்பது பரிந்துரைகள் என்ற 6 பக்கங்களின் சுருக்கம் மேலே உள்ளது.
(எந்த நூல் வாசிப்பிற்கும் இது பொருந்தும்-பக். 41)

ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை ஒரு கடிதத்தை” எல்லோருமே பாராட்டை விரும்புகின்றனர்” என்று துவங்கினார்.” மனித இயல்பில் உள்ள ஆழமான அம்சம் பாராட்டப்பட வேண்டும் என்ற வேட்கை” என்று வில்லியம் ஜேம்ஸ் கூறியுள்ளார். பாராட்டப்பட வேண்டும் என்ற ‘விருப்பம்’ என்றோ ‘ஆசை’ என்றோ, அல்லது ‘ஏக்கம்’ என்றோ கூறவில்லை. பாராட்டப்பட வேண்டும்’ என்ற ‘வேட்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு தீவிரமான அடிப்படைத் தாகம். மக்கள் தங்களின் இந்த இதய தாகத்தை நேர்மையாகத் தணிக்கும் ஒருவரின் காலடியில் கட்டுண்டு கிடப்பார்கள்.” அப்படிப்பட்ட ஒருவர் இறக்கும்போது வெட்டியான் கூட இரண்டு சொட்டு கண்ணீர் விடுவான்(பக்.68-69).

சில நாட்களுக்கு முன்பு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார்.”டேல் கார்னகி(1888-1955)எழுதியHow to win and influence people –  நண்பர்களை எளிதா கப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்கு வதும் எப்படி “என்ற புத்தகம் மிகச்சிறந்த வாசிக்க வேண்டிய புத்த கம் என்று குறிப்பிட்டார். மேலும்,”டேல் கார்னகி தன்னம்பிக் கை நூல்களின் முன்னோடி மற்றும் தன்னம் பிக்கை நூல்கள் எழுதுபவர்களுக்கும் முன்னோடி” என்றும் குறிப்பிட்டார் கிருஷ்ணமூர்த்தி.

1936 -ல் முதலில் வெளிவந்த இப்புத்தகம் இன்றும் விற்பனை யில் உள்ளது. கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளது இப்புத்தகம் ..!

1.மக்களைக் கையாள்வதிலுள்ள அடிப்படை உத்திகள்,
2 மக்கள் உங்கள் மீது விருப்பம் செய்வதற்கான வழிகள்,
3. உங்களோடு ஒத்துப்போகும்படி மக்களை மாற்றுவது எப்படி?
4. தலைமைத்துவம்: மக்களுடைய மனத்தைப் புண்படுத் தாமலும் கோபப்படுத்தாமலும் அவர்களை மாற்றுவது எப்படி?என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 30 உள் தலைப்பு களில் விவரிக்கப்பட்டுள்ளது.

நாகலட்சுமி சண்முகம் நமக்கு சிறப்பாக எளிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

வெளியீடு:மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்.ரூ.250. புதுக்கோட்டை
சக்ஸஸ் புக் ஸ்டாலில் கேட்டால் வாங்கித் தருவார்கள்.
# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை-புதுக்கோட்டை #

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top