Close
நவம்பர் 24, 2024 6:26 மணி

அரிமளம் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

புதுக்கோட்டை

அரிமளம் அருகே நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு

அரிமளம் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில்  8 வீரர்கள் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பில் புனித அந்தோணியார் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை , ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றன.

ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களமிறக்கப்பட்டனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள்  நிர்ணயிப்பட்டு போட்டி நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த வீரர்கள் காளையை அடக்க முடியாமல் போனால் அந்தச்சுற்றில்  காளை  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல்  நிர்ணயிக்கப்பட்டட்ட நேரத்திற்குள் காளையை வீரர்கள் அடக்கி விட்டால் மாடுபிடி வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து  வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை
வடமாடு ஜல்லிக்கட்டு போட்டில் காளையை அடக்க முயன்ற இளைஞர்கள்

போட்டியில் பங்கேற்ற   சில குழுவினர் போட்டி போட்டு காளைகளை தழுவினர்.  சில காளைகள் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்தது இந்தக்காளைக ளுக்கு  பரிசளிக்கப்பட்டது. மேலும் இதில் வெற்றி பெறும் குழுவினருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, காளைகளும் உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டது.
போட்டியின்போது,  மாடுகளை அடக்க முயன்றபோது 8 வீரர்கள் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயம் அடைந்த மற்ற வீரர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியைக் காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந் தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top