வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 -ன்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 -ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம், நில சீர்த்திருத்த ஆணையர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, முன்னிலையில் (19.01.2024) நடைபெற்றது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 01.01.2024ஆம் தேதியினை தகுதியான நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024-இன் இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 22.01.2024 அன்று வெளியிடுவது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் என்.வெங்கடாசலம், (19.01.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2024 -ன் படி படிவம் 6 -ல் 31,364 படிவங்களும்;, படிவம் 7 -ல் 10,557 படிவங்களும், படிவம் 8-ல் 8,797 படிவங்களும் ஏற்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.
பின்னர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கம் மையத்தில் (EVM Demonstration Center) வாக்காளர்கள் வாக்குப்பதிவு செயல்முறை விளக்கத்தினை, நில சீர்த்திருத்த ஆணையர் – வாக்காளர் பட்டியல் பார்வை யாளர் என்.வெங்கடாசலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர்- மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர் பார்வையிட்டார்கள
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) க.ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை-அறந்தாங்கி (பொ)) ஷியாமளா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அ.சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.