Close
நவம்பர் 24, 2024 9:05 மணி

புதுக்கோட்டையில் விடுதி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டையில் “காபி வித் கலெக்டர்” நிகழ்வில் விடுதியில் தங்கியுள்ள மாணவர் மாணவிகளுடன்  ஆட்சியர் கலந்துரையாடினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ‘காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் .ஐ.சா.மெர்சி ரம்யா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் நல விடுதிக ளில் தங்கி பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுடன்  கலந்துரையாடினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர்  செயல்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், இல்லம் தேடிக் கல்வி திட்டம், முதலமைச்ச ரின் காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக மாணவ, மாணவிகளின் கல்வி ஆர்வத்தினை மேம்படுத்தி வருகிறார்.

மேலும் விடுதிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாணவ, மாணவிகள் அனைவரும் பாடப் புத்தகங்களை பயில்வது மட்டுமின்றி, சிறந்த அறிஞர்களின் புத்தகங்கள், பொதுஅறிவு புத்தகங்கள் உள்ளிட்ட அறிவை பெருக்கிக்கொள்ளும் சிறந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

புதுக்கோட்டை
காபி வித் கலெக்டர் நிகழ்வு

இவ்வாறு படிப்பதன் மூலம் நீங்கள் இலக்காக வைத்திருக்கும் உயர்ந்த நிலையினை அடைய வழிவகை ஏற்படும். மேலும் மாணவ, மாணவிகள் கல்வியில் உயர்நிலையினை அடைவதற்கான வழிகாட்டுதல்கள், கல்வியில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களால் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி உயர்நிலையினை அடைவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர்மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர், மாவட்ட மனநல மருத்துவர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top