Close
நவம்பர் 22, 2024 4:07 காலை

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டி

புதுக்கோட்டை

அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது.

அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் தேன் சிட்டு வினாடி வினா போட்டி பள்ளி அளவில் நடைபெற்றது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டு இதழ்களாக தேன்சிட்டு இதழ் வெளி வருகிறது. மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் விதமான செய்திகள் இதில் வெளிவருகின்றன.

இந்த இதழில் வரும் செய்திகளில், துணுக்குகளில் இருந்து வினாக்கள் தயாரித்து அதனை மாதம் தோறும் பள்ளியளவில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் வினாடி வினா போட்டியாக நடத்தப்படுகிறது.

இவ்வாறு மாதம்தோறும் பள்ளி அளவில் நடத்தப்படும் தேன்சிட்டு வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார்கள்.

பின்னர் ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

பள்ளி அளவிலான தேன்சிட்டு வினாடி வினா போட்டியை அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதி தலைமை ஆசிரியர் பொறுப்பு முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இல்லம்தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரஹமதுல்லா வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பேசினார்.

இப்போட்டியை ஆசிரியர்கள் சரவணமூர்த்தி, சத்தியபாமா, ஜஸ்டின் திரவியம், பாரதிராஜா, சக்தி மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top