இளைஞர்களே உங்களின் ஒரு துளி இரத்தத்தை தாருங்கள் நாளையே சுதந்திரம் வாங்கித்தருகிறேன் என்று சொன்ன நேதாஜியின் பிறந்த நாளில்.அந்த மாவீரன் மரணத்தில் நீடிக்கும் மர்மம் குறித்த சில குறிப்புகள்..
1950 களில் நேதாஜி தொடங்கிய பார்வார்ட் பிளாக் கட்சி தலைவரான முத்துராமலிங்க தேவர் பர்மாவிற்கு சுற்றுப் பயணம் சென்றார். சில வருடங்கள் அவரைப் பற்றிய எந்த ஒரு தகவல்களும் இல்லை. திடீரென்று தோன்றிய அவர், நேதாஜி உயிரோடு தான் இருக்கிறார் என்றும், தான் சந்தித்ததாகவும் கூறினார்.
இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த பின் 1954 களில் உத்திர பிரதேசத்தில் நேதாஜியை போன்ற ஒருவர் தென்பட்டார். அவரைப் பற்றிய தகவல்களை அன்றே கண்டறிய முடியாத நிலையில், கும்னாமி பாபா என்று அவரை அழைத்தனர். பலருக்கு அவர் நேதாஜி என்ற சந்தேகம் இருந்தது. அவரை சுற்றி விஜபிக்கள் சந்திப்புகளும் உளவு பிரிவு வளையங்களும் சூழ்ந்திருந்தன.
நேதாஜி குடும்ப உறுப்பினர்களின் கடிதங்கள், தேசிய ராணுவத் தலைமைகளின் கடிதங்கள், நேதாஜி பயன் படுத்திய ஜெர்மன் தொலைநோக்கிகள், சிறிய தட்டச்சு எந்திரம், தங்க ரோலக்ஸ் கைக்கடிகாரம், ஒமேகா கைக்கடி காரம் (நேதாஜியின் தந்தை பரிசளித்தது) என அனைத்தும் பகவான்ஜியிடம் இருந்தது.
திபெத், மங்கோலியா, ரஷ்யா , பங்களாதேஷ் வரைபடங் களும் இருந்தது. அது நேதாஜி தலை மறைவாக இருந்த காலத்தில் உதவி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் நேதாஜியின் பிறந்தநாள் அன்று பகவான்ஜியை சந்திக்க பெங்காலிகள் பலர் வருவதும், அமைதியாக உள்ளே விழா நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நேதாஜியின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிஷன் கள் அனைத்தும் பகவான்ஜியை மறுப்பதிலேயே அக்கறை காட்டியது.
அவரின் பொருட்களை ஆய்வு செய்த போது, நேதாஜிக்கு நெருக்கமானவர்கள் இது நேதாஜியுடையது என்று உறுதிபடkd கூறினார்கள். நேதாஜி குடும்பத்தினர் மட்டும் அவருடையது இல்லை என்று கூறிவிட்டனர். பகவான்ஜியிடம் குடும்பத்தினர் எழுதிய கடிதங்கள் இருந்தது. பகவான்ஜி தன்னை மறைத்தது போல் அவர்களும் மறைத்தனர்.
2013 -ல் அலகபாத் உயர்நீதிமன்றம், பகவான்ஜியை நேதாஜி இல்லை என்று மறுத்த முகர்ஜி கமிஷனை நிராகரித்தது. பகவான்ஜி நேதாஜி இல்லை என்று சரிவர சோதனை செய்யாமல் எவ்வாறு முடிவுக்கு வரலாம் என்றும் கேட்டனர். அனைத்து அரசாங்கமும் நேதாஜி விவகாரத்தில் மர்மத்தை மட்டுமே கடைப்பிடிக்கிறது.
மக்களின் நேதாஜி, கும்னாமி பாபாவாக வாழ்ந்ததாக அவருடைய விசுவாசிகளின் நம்பிக்கையாக இருந்தது. நேதாஜி என்று அறியப்பட்டதும் தலை மறைவான கும்னாமி பாபா, தேசிய ராணுவ உயரதிகாரிகளிடம் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. சரயூ நதியில் பகவான் தகனமும் நாடகம் தான். அவர் இமயத்திற்கு சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.
மாறுவேடத்தில் ஒரு ஆசிரம வாசியாக இந்தியாவில் வாழ்ந்து மறைந்தார் என்று சொல்வோரும் உண்டு. தமிழகத்தின் வேதாரண்ய கடற்கரையில் நேதாஜியை போன்ற ஒரு முதியவர் சில நாட்கள் சுற்றி திரிந்ததாகவும் சொல்கிறார்கள்.
எது எப்படியோ அவர் விமான விபத்தில் மரணிக்கவில்லை என்பது மட்டும் நன்றாக தெரிந்த உண்மை, காரணம் உலகப்போரில் ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகிக்கு பிறகு அமெரிக்க, பிரிட்டன் கூட்டுப்படைகளிடம் சரணடைந்து விட்டது. தன்னிடம் அடைக்கலமாக இருந்த நேதாஜியை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை என்பதால் ஜப்பான் நாடு நடத்திய ஒரு நாடகம் தான் விமான விபத்தும் நேதாஜியின் மரணம் என்கிற நாடகமும்.
வாழ்நாள் முழுவதும் நேரடி எதிரியான பிரிட்டிஷ் அரசையும் அவனது கைக்கூலிகளாக செயல்பட்ட பலரையும் மீறி, இன்றும் வரலாற்றில் நிலைத்து நிற்பதுதான் நேதாஜியின் சாகசம். தேசபக்தி நிறைந்த அனைத்து இந்தியனின் உள்ளத்தில் இன்றளவும் வாழ்ந்து வருகிறார் நேதாஜி.
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #