அனுதாப உணணாவிரதம் கூடாது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்று எண்ணற்ற தந்திகளும் கடிதங்களும் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.நான் அவர்களுடைய நடவடிக்கையை சிறிது கூட ஆதரிக்கவில்லை.
அவர்கள் என் மீதுள்ள அன்புக்காக அல்லது என் லட்சியத்தில் அனுதாபம் வைத்திருப்பதற்காக இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும். அவர்கள் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். அனுதாபம் காட்டுவதற்கு இது சரியான வழியல்ல. தீண்டத்த காதவர்க்கு சேவை செய்வதும், தீண்டாமை ஒழிப்புக்கு பாடுபடுவதும் அவர்கள் கடமை.(காந்திஜி செப்டம்பர் 23 ல் வெளியிட்ட அறிக்கை )பக். 109.
நம் பாரத பிரதமர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக 11 நாட்கள் கடுமையான விரதம் இருக்கிறார் என்றும் அதனை ஓட்டி தரையில் படுத்து உறங்கி , இளநீர் மட்டுமே பருகி, கோ பூஜை செய்து, பசுக்களுக்கு உணவளித்து தினந்தோறும் விரதத்தை கடுமையாக கடைபிடித்து வருகிறார் என்றும் 20.1.2024 இந்து தமிழ்திசை நாளிதழில் பார்த்தேன்.
குஜராத்தைச சேர்ந்த இன்னொரு நபர், காந்தி என்று பெயர், அவர் இது போல ஏதேனும் செய்திருக்கிறாரா என்று பார்த்தேன். அவரும் செய்திருக்கிறார். 18 முறை உண்ணா விரதம் இருந்திருக்கிறார். அதில் 3 முறை 21 நாட்கள் இருந்தி ருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் 1 முறை , இந்தியாவில் இரண்டு முறை. உண்ணாவிரதத்தின் போது இந்த மனிதர் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்.
இந்த புத்தகம்,”உன்னத நோன்பு “, தாழ்த்தப்பட்டோருக்கான சமஉரிமைக்காக காந்திஜி “சாகும் வரை உண்ணாவிரதம் ” என்று அறிவித்து, 1932 செப்.20-26 – 7 நாட்கள் – 149 மணிநேரம் இருந்த – உண்ணாவிரதத்தைப் பற்றியது. காந்தியின் செயலாளர் பியாரிலால் THE EPIC FAST என்று ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழ் வடிவம். பூனா ஒப்பந்தத்தின் முடிவில் உண்ணாவிரதத்தை காந்தி விலக்கிக் கொண்டார்.
அந்த உடன்படிக்கையைப் பற்றி இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. எனினும் அந்த உண்ணாவிரதப் போராட் டத்தின் முழுச் செய்திகளை மட்டுமல்லாமல், ஆலயப்பிர வேசம் தொடர்பான செய்திகளையும் விரிவாக உணர்வு பூர்வமாக எழுதி உள்ளார் பியாரிலால்.
இன்றைய உண்ணாவிரத போராட்டங்களின் தன்மை பற்றி அறிய இதை வாசிக்க.நவஜீவன் பிரசுராலயம்,அகமதாபாத்.
ரூ.60.
# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #