Close
நவம்பர் 24, 2024 8:45 மணி

பல்லவராயன் பட்டி தொடக்கப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின உறுதி ஏற்பு

புதுக்கோட்டை

பல்லவராயன் பட்டி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின உறுதி ஏற்கும் நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை வட்டாரத்தின் சார்பில் பல்லவராயன் பட்டி தொடக்கப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல்லவராயன் பட்டியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா தேசிய பெண்கள் தினம் குறித்து பேசியதாவது:

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் இந்த முயற்சியை 2008 -ஆம் ஆண்டு எடுத்தது. இந்திய சமூகத்தில் பெண் குழந்தை கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் உரிமை கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் அவர்களின் உரிமைகளை தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

பெண்கள் பல்வேறு நிலைகளிலும் முன்னேறி உள்ளனர் என்பதைதான் இந்த நாளில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . மேலும் பெண்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமத்துவம் என அனைத்திலும் பெண்கள் முன்னேறியிருக்க வேண்டும் என்பதுதான் இந்த நாளின் முக்கியத்துவம் என்றார் அவர்.

இந்நிகழ்வில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சுதாகர் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர் பூமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top