திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் சம்பவத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கையும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் வலியுறுத்துகிறது.
திருப்பூர் மாவட்டம் , பல்லடத்தை சேர்ந்த நேச பிரபு என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நியூஸ் 7 செய்தி சேனலில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டு வந்துள்ளார்.
இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தன்னை சிலர் நோட்டமிட்டு வருவதாக காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். இருப்பினும் ‘வழக்கம் போல்’ போலீஸார் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தனது வீட்டின் அருகில் இருந்த செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே, நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மை செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்திட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சங்கம்(பிரஸ் கிளப்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.