ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தொழுநோயால் ஏற்படும் உடல் ஊணத்தை முற்றிலும் தவிர்க்கலாம் என்றார் புதுக்கோட்டை துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) மருத்துவர் மு.சிவகாமி.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக் கான ஊனத் தடுப்பு சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமிற்கு புதுக்கோட்டை துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) மருத்துவர் மு.சிவகாமி தலைமை வகித்தார். அவர் பேசும்போது, தொழுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்களை பொதுமக்கள் மத்தியில் மேலும் பரவலாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். வரும் 30.01.2024 முதல் 13.02.2024 வரை நாடு முழுவதும் ஸ்பர்ஸ் தொழுநோய் முகாம் நடைபெற உள்ளது.
ஆரம்பத்திலேயே சிசிச்சை பெற்றுக்கொண்டால் தொழு நோயால் ஏற்படும் உடல் ஊணத்தை முற்றிலும் தவிர்க்க முடியும். எனவே, சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல் இருந்தால் உடனடியாக மருத்துப் பணியாளர்களிடம் காண்பித்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் 15 நபர்களுக்கு மருத்துவ உபகரணங் கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராம்சந்தர், டாக்டர் நித்தீஸ், மாவட்ட நலக்கல்வியாளர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக வட்டார மருத்துவம் சாராத மேற்பாவையாளர் ரமா.ராமநாதன் வரவேற்க, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் நன்றி கூறினார்.