Close
நவம்பர் 22, 2024 4:23 காலை

மணலி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விரைவில் 7 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்

சென்னை

மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார்

மணலி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விரைவில  7 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் பயன்பாட்டு வரும் என சிபிசிஎல் மேலாண் இயக்குனர் அரவிந்த்குமார் தகவல் தெரிவித்தார்.
சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 7மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) இயக்குனர் அரவிந்த் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சார்பில்  நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா மணலியில் உள்ள ஆலை வளாகத் தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் தேசியக் கொடியை பறக்க விட்டு சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின ரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
அப்போது அரவிந்த் குமார் பேசியது: கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதில் சிபிசியில் நிறுவனத்தில் உற்பத்தித்திறன்  தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது.
கந்தக மீட்பு அலகு,  ஆவியாகும் கரிம சேர்மங்களை அகற்றும் அமைப்பு, கூரை காற்றாலை உள்ளிட்ட திட்டங்களை சிபிசிஎல் செயல்படுத்தி வருகிறது. மணலில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுமார் 7 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
வங்கதேசம், நமீபியா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு  கப்பல்கள் மூலம் நாப்தாவை சிபிசிஎல் நிறுவனம் முதல் முறையாக ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிழக்கு கடல்சார் வழித்தடத்தில் ரஷ்யா துறைமுகங்களில் இருந்து கச்சா எண்ணெயை  சென்னை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் முயற்சியில் சிபிசிஎல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருள்கள் மற்றும் உயிரி அடிப்படையிலான இரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வது குறித்து சென்னை ஐஐடி, ஆர்ஜிஐபிடி உள்ளிட்ட நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற் கொண்டு வருகிறது.
நாட்டிலுள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் சிபிசிஎல் நிறுவனம் உற்பத்தி செயல் திறனுக்கான கடந்த ஆண்டிற்கான சிறப்பு விருந்தினை  பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்திட மிருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார் அரவிந்த் குமார்.
நிகழ்ச்சியில் எச்.சங்கர், இயக்குநர் (தொழில் நுட்பம்), ரோஹித் குமார் அகர்வாலா, இயக்குநர் (நிதி), த.பி. கண்ணன், இயக்குநர் (செயல்பாடுகள்), தேவ்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top