இந்திய பத்திரிகைகள் தினம் குறித்து வாசகர் பேரவை வெளியிட்ட வாழ்த்துச்செய்தி: ஜனவரி 29 , “இந்திய பத்திரிகைகள் தினம்.
1780 , ஜனவரி 29 அன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயர் Bengal Gazette or Calcutta General Advertiser என்ற ஆங்கில வாரப் பத்திரிகையை வெளியிட்டார்.
இது தான் இந்தியாவின் முதல் பத்திரிகை. கொள்கைப் பிடிப்போடு, அச்சமின்றி எழுதியதற்காக இந்தியாவில் முதன் முதலில் சிறை சென்றவரும் அவரே.
இந்த தினத்தில் அச்சமின் றியும், நேர்மையோடும், சமூக அக்கறை பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளோடு புதுக்கோட்டை “வாசகர் பேரவை” அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது என அதன் செயலாளர் சா. விஸ்வநாதன் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.