Close
அக்டோபர் 6, 2024 11:26 காலை

குறைந்த செலவில் அயோத்திக்கு செல்ல நினைப்பவர்கள் இதப்படிங்க…

தேனி

அயோத்தி ராமர் கோயில்

ஒவ்வொரு திங்கள் அன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா ரயில் செல்கிறது . சென்னை எழும்பூர் நண்பகல் 12 மணிக்கு வருகிறது.

ரயில் எண் 22613 RMM AYC சரியாக புதன்கிழமை காலை 9 மணிக்கு அயோத்தி செல்கிறது. அயோத்தியா தாம் என்ற ரயில் நிலையத்தில் இறங்குங்கள். அயோத்தியா கன்டோன் மென்ட் கடைசி ரயில் நிலையம் இறங்கினால் 15 கிமீ மீண்டும் வர வேண்டும்.

ஆனால் அயோத்தியா தாம்மில் இறங்கி நேராக சரயு காட்டுக்கு (ராம் காட்) 2 கிமீ நடந்து வர வேண்டும். அங்கு குளித்து விட்டு மீண்டும் வந்த வழியே 1.5 கிமீ திரும்பினால், அனுமான் காரி என்னும் அனுமான் கோட்டை காவலாக  இருக்கும் கோயிலை அடையலாம். 50 படிக்கட்டுகள் ஏறி ஹனுமான் தரிசனம் செய்து அங்கிருந்து வெளியே வந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஶ்ரீ ராம் ஜென்ம பூமி  நுழைவு வாயிலை அடையலாம்.

பெரிய  பெட்டிகள் வைத்திருந்தால் போலீஸ் சோதனைக்கு  முன்பே வலது பாகத்தில் லாக்கர் அறை உள்ளது. அங்கு உங்கள் பொருட்களை பாதுகாப்பாக (மொபைல் , கடிகாரம் தவிர) வைத்து செல்லலாம். உள்ளே சென்றவுடன் இலவச  பொருள் வைப்பரை கவுண்டரில் உங்கள் சிறிய  பை, கைப்பை , இடுப்பு  பெல்ட், செல்போன். கடிகாரம் முதலியவைகளை வைத்து விட்டு செல்ல வேண்டும். (பொருள் வைக்க குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் ).

மீண்டும் உள்ளே  பாதையில் சென்றவுடன், ஒருவர் பின் ஒருவர் கணக்கில் இரண்டு வரிசையாக எறும்பு சாரை போல் இடிபாடு இல்லாமல் நடந்து செல்லலாம். 200 மீ நடந்தால் கோயில் முன் மண்டபத்தில் இருந்தே ஶ்ரீ பாலராமனை தரிசித்து கொண்டே அருகில் செல்லலாம். சுமார் 20  மீட்டர்e தொலைவில் இருந்து ஶ்ரீ ராமனை கண் குளிர தரிசனம் செய்து வெளி வரலாம்.

பூந்தி அல்லது சர்க்கரை கற்கண்டு பிரசாதமாக கொடுக்கி றார்கள். வெளி வரும் வழியில் நீங்கள் வைத்த  பர்ஸ், செல்போன், பை போன்ற பொருட்களை பெற்று கொண்டு நுழைவு வாயிலை அடையலாம். பிறகு மீண்டும் அனுமான் காரி என்னும் கோயில் அருகே வந்து தசரதன் மாளிகை தரிசனம் செய்யலாம்.

இங்கு தான் ஶ்ரீ ராமன், லட்சுமண், பரதன், சத்ருகன் ஆடி பாடி விளையாடிய உப்பரிகை பார்க்கலாம். அங்கிருந்து வெளி வந்து வலது பக்கம் திரும்பி 50 மீட்டர் நடந்தால் ஒரு பழைய வீட்டில் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் தரிசிக்கலாம். பிறகு மீண்டும் தசரதன் மாளிகை வழியாக  பக்க வாட்டு சந்தில் நுழைந்து பின் புறம் சென்றால் ஜனக மஹாராஜா சீதைக்கு சீதனமாக கட்டி கொடுத்த மாளிகையை காணலாம். வழி எல்லாம் இப்போது அன்னதானம் செய்கிறார்கள். வழியில் எல்லாம் மடம், அறைகள் உள்ளது. முன்பதிவு செய்து விட்டு செல்லலாம்.

ஒவ்வொரு புதன்கிழமை இரவும் 11 மணிக்கு அயோத்தியா கன்டோன்மென்ட் இருந்து சென்னை அல்லது ராமேஸ்வரத் திற்கு ரயில் திரும்புகிறது. 22614 AYY RMM மூலம் லக்னோ வந்தும் சென்னை  திரும்பலாம். சீத்தாராம் பியாஸ் குஞ் இடத்தில் தங்குவதற்கு  9532065447 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சூடு தண்ணீர் , கம்பளி, விசாலமான அறைகள் உள்ளது. உங்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படுவோர் ஆத்ம சரண ஆலய தபோவனத்தை சேர்ந்த கே.முருகராஜ் என்பவரை 9840927502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top