நான் உலகில் வெவ்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்திருக் கிறேன். இவ்வாறு சுற்றுப் பயணம் செய்யும் போது பல மகான்களையும் மகரிஷிகளையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.
சுவாமி ஸ்ரீ நாராயண குருவை விட ஆன்மீகத்துறையில் சிறந்தவர் ஒருவரையும் அல்லது அவரைப் போன்று ஆன்மீக ஆற்றல் உடையவர்களையும் நான் சந்திக்கவில்லை என்று ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்கிறேன்.
அந்த தெய்வீக ஒளிக்கதிர் வீசுகின்ற பிரகாசமான முகத்தையும் , மிகத்தொலைவிலுள்ள தொடுவானத்தை உற்றுப் பார்க்கும் யோகி யின் கண்களையும் என்னால் ஒரு பொழு தும் மறக்க இயலாது. ரவீந்திரநாத் தாகூர் 1922 -ல் குருவைச் சந்தித்தபோது தோன்றிய எண்ணம்.
மகா குரு ஸ்ரீ நாராயணாவின் உபதேசம் ஸ்ரீ சங்கரரின் தத்துவத்தைத் தழுவியிருந்தது, அவர் செயலில் ஒரு ஞானி, சிறந்த சமய அறிவொளி . அவர் மக்களின் வாழ்க்கையைப் பற்றியும், சமூகத் தேவைகளைப் பற்றியும் உணர்ந்திருந்தார். தென்னிந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களின் (இருபது லட்சம் பேர்) முன்னேற்றத்திற்காக மிகவும் உதவினார். சிலசமயங்களில் அவருடைய சேவை காந்தி யோடு ஒப்பிடப்பட்டது.
ரோமன் ரோலாண்ட் என்ற பிரான்சு நாட்டு அறிஞர்.காந்திஜி எப்பொழும் குருவை புனித ஸ்ரீ குரு என்று அழைப்பார். மேலும் ஹரிசனங்களின் முன் னேற்றத்திற்கான செயல்களை ஆதரித்து அவை தீவிரமடைய ஊக்குவித்தார் .
அவர் சாதித்தது இரத்தம் சிந்தாப் புரட்சியாகும்.சுதந்திர மாக வாழ கல்வி கற்றுக்கொடு.வலிமை பெருவதற்கு ஒன்றாகச் சேர்ந்து நில்.பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கு தொழில் நடத்து – ஸ்ரீநாராயண குருவின் இந்தச் செய்தி, உலகில் ஒடுக்கப்பட்ட வசதியில்லாத மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ அவர்களுக்கு எல்லா சூழ்நிலையிலும் எல்லாக் காலங்களிலும் பொருந்தும் ஒன்று.
அரை நூற்றாண்டிற்கும் குறைவான காலகட்டத்தில் அவர் கேரளாவிலுள்ள ஒடுக்கப்பட்ட சாதியினரை கீழ் மட்ட த்திலிருந்து, தனது சொந்தக் கால்களில் நிற்கக் கூடிய சுயமரியாதையைக் கொள்ளக்கூடிய மனிதர்களாக உயர்த்தினார்.
குரு ஆற்றிய தொண்டுகளின் காரணமாக இன்று அவர்கள் பொதுச் சாலைகளை சுதந்திரமாக உபயோகிக்க முடிகிறது. 1925-ல் கோயில்களைக் சுற்றியுள்ள சாலைகளை உபயோகிக் கும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. 1936 -ல் தீண்டத்தகாதவர்களை கோயில்களுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பது சட்டத்திற்கு விரோதம் என்று கோயில் அதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட்டது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவில் இந்தச் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்கள் பள்ளிகளில் சேர அனுமதிக்கப்படவில்லை. குரு சேவை புரியத் தொடங்கிய இருபது முப்பது ஆண்டுகளுக்குள்ளாகவே, அவர்களுக்கு பள்ளியில் சேர்ந்து இலவச கல்வி பயில அனுமதி கிடைத்தது. 1947 -க்குள்ளாகவே இவர்கள் உயர்நிலைப் பள்ளிகள், வேறு கல்வி நிறுவனங்கள் தவிர 12 கல்லூரிகளையும் சுயமாக நிர்மாணித்தனர்.
1895 ல் சுவாமிஜி போராட்டத்தை துவங்கிய காலத்தில் அரசு நிறுவனங்களில் ஒருவர் கூட வேலையில் அமர்த்தப்பட வில்லை. ஐந்து ரூபாய் வாங்கும் ஒரு தொழிலாளி கூடக் கிடையாது. 1947 -ல் இவர்கள் கணிசமான எண்ணிக்கையில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார்கள். சிலர் உயர்ந்த பதவிகளிலும் இருந்தார்கள்.
இந்த தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கவிஞர்கள், பதிப்பாசிரியர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதை எழுதாளர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் என எழுந்தவர். நாட்டில் அவர்களுக்கு என ஒரு உயர்ந்த இடம் பெற்றனர்.
முன்னுரையில் நூலாசிரியர்:
சுவாமி விவேகாநந்தர் கேரளாவை ‘இந்தியாவின் பைத்தியக் காரர்களின்கூடாரம்’ என்றார். ஏனென்றால் உயர்சாதிகாரர் களை, தாழ்த்தப்பட்டவர்கள் பார்ப்பதற்கான இடைவெளி, 12 அடியிலிருந்து 32 அடி வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீ நாராயண குரு (1855 – செப்.20, 1928) தாழ்த்தப்பட்ட ஈழவ சமுதாயத்தில் பிறந்தவர். கேரளம் உலகிற்கு தந்த ஆகச் சிறந்த சமூக விஞ்ஞானி.சமுக முன்னேற்றத்திற்கு ஆன்மீகம் மட்டுமே பயன்பாடாது. அதற்கு கல்வி, தொழில், சமூக ஒற்றுமை அவசியம் என்பதை உணர்ந்து அதைப் போதித் தவர்.
அதற்கான முயற்சிகளை முன்னின்று செய்தவர். வழிபாட்டு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியவர். உயர்சாதி மக்கள் செல்லும் ஆலயங்களுக்குள் செய்ய நமக்கு அனுமதி இல்லையென்றால், அதே தெய்வங்களை நாம் கோயில் கட்டி வழிபட்டால் என்ன என்ற சிந்தனையை வளர்த்தவர்.
முர் கூட் குன் ஹப்பா எழுதிய ஸ்ரீ நாராயண குரு நூல் ,அவர் பிறப்பு முதல் சித்தியடைந்தது வரையிலான வரலாறு, ஆன்மீகத் தேடல்கள், சமூக மேம்பாட்டுக்கு அவர் போட்ட விதைகள், அது விருட்சமாக வளர தோற்றுவித்த அமைப்புகள், அவைகள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் யாவற்றையும், எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. முர் கூட் சிறு வயது முதலே குருவின் சேவைகளைப் பற்றி அறியும் வாய்ப்பு பெற்றவர்.
எம்.சேஷனின் தமிழாக்கம் மிகச்சிறப்பு. சமூக (சாதியின்) மேம்பாட்டிற்காக போராடும் அமைப்புகள் முதலில் கடைபிடிக்க வேண்டியது குருவின் மூன்று விஷயங்களை, சுதந்திரமாக வாழ கல்வி கற்றுக் கொடு,வலிமையைப் பெருவதற்கு ஒன்றாகச் சேர்ந்து நில், பொருளாதார முன்னேற்றம் பெருவதற்கு தொழில் தொடங்கு இந்த மூன்றையும் கடைபிடித்த நாடார் சமூகம் முன்னேறி யிருக்கிறது.வெளியீடு.நேஷனல் புக் டிரஸ்ட், புதுதில்லி .ரூ.45.
# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #