Close
நவம்பர் 22, 2024 2:12 காலை

கிக் பாக்ஸிங்கில் தங்கப்பதக்கங்களை வென்ற மாணவிக்கு எம்எல்ஏ சங்கர் நிதியுதவி

சென்னை

கிக் பாக்ஸிங்கில் தங்கப் பதக்கங்களை வென்ற மாணவிக்கு நிதி உதவி .கே.பி.சங்கர் எம்.எல்.ஏ வழங்கினார்.

கிக் பாக்ஸிங்கில் தங்கப்பதக்கங்களை வென்ற மாணவிக்கு எம்எல்ஏ- கே.பி.சங்கர்  நிதி உதவி வழங்கினார்

மாதவரம் தொகுதிக்குட்பட்ட மணலி அருகே, எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்தவர். தேவி (35). மணலி சின்ன சேக்காடு நடுநிலை பள்ளியில் சத்துணவு ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு கவின் உதயம் என்ற மகனும், அபர்ணாகவினயா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 2014 ஆண்டு இவரது கணவர் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். இந்நிலையில் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 -ஆம் வகுப்பு படிக்கும் அபர்ணாகவினயா சிறு வயது முதல் கிக் பாக்சிங்கில் பயிற்சி பெற்று வருகிறார்.

இதன் காரணமாக தாய்லாந்து, நேபாளம், இந்தோனேஷியா, போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான பல்வேறு போட்டிகளிலும், மத்திய பிரதேசம், கேரளா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளிலும் அபர்ணாகவினயா பங்கேற்று கிக் பாக்ஸிங் கில் முதலிடம் பிடித்து 9 க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை  வென்றுள்ளார்.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் 26  -ஆம் தேதி கம்போடி யாவில் ஒலிம்பிக் பெடரேசான் சார்பில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று விளையாடிய அபர்ணாக வினயா தங்கம் வென்றார்.

இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் 18 -ஆம் தேதி முதல் 26 -ஆம் தேதி வரை 5 -ஆவது உலக சாம்பியன் ஷிப் போட்டி தாய்லாந்தில் நடைபெறுகிறது. இதில் அபர்ணாகவினயா தமிழகத்தின் சார்பில் பங்கேற்கிறார்.

கிக் பாக்ஸிங்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்த மாணவி அபர்ணாகவினயாவை திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், கே.வி.கே.குப்பத்தில் உள்ள தனது அலுவலகத் துக்கு  மாணவியை வரவழைத்து ரூ30 ஆயிரம் நிதி உதவி வழங்கி தாய்லாந்தில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்தினார்.இந்நிகழ்ச்சியின் போது அபர்ணாக வினயாவின் தாய் தேவியும் உடனிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top