Close
நவம்பர் 22, 2024 9:13 காலை

திருமயத்தில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

திருமயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திருமயத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமயத்திலுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க வட்டாரச்செயலாளர் பாண்டிக்கமலம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாவட்டத்தலைவர் கே. முகமதலிஜின்னா பேசியதாவது: .மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்த நிதியை குறைப்பது சரியில்லை. இதை வன்மையாக எதிர்க்கிறோம்.வளரும் குழந்தைகள் வயிற்றில் அடிப்பது எந்தவிதத்தில் நியாயம்.

குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரமும் உயரத்திற்கேற்ற எடையையும்அங்கன்வாடி ஊழியர்கள்தான் கூறுகின்றனர். விலைவாசிக்கு ஏற்றார் போல ஊதியம் இல்லை. உழைப்பிற் கேற்ற ஊதியத்தை வாழ்வாதாரத்திற்காவேகேட்கிறார்கள்.

ஊட்டச்சத்து குறைவில்லாத மாநிலமாய் மாறிட அங்கன்வாடி ஊழியர்களின் நிலையை எண்ணி தமிழக அரசு சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேச வேண்டும் என்றார்  கே.முகமதலிஜின்னா.
இதில், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச்செயலர் எம். வீரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ரேவதி,  வட்டாரத்தலைவர் ஜெயலட்சுமி, பொருளாளர் சுதா, வள்ளியம்மை உள்ளிட்டோர் பேசினர்.

இதில், திருமயம் ஒன்றியத்தைச்சார்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இதே போல அரிமளத்தில்…  அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கே.எம். ரேவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரிமளம் வட்டாரத்தலைவர் செவந்தியம்மாள், நிர்வாகிகள் சூரியகாந்தி, முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top