போக்குவரத்துக்கழகங்களில் தின கூலிக்கு தொழிலாளர் களை பணியமர்த்தக்கூடாது என எஸ்விஎஸ்=ஆம் ஆத்மி மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சுவாமி கூறியதாவது:.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயங்கக் கூடிய மொத்தம் எட்டு கோட்டங்கள் உள்ளன. கும்பகோணம் கோட்டத்தில் பிரிட்டிஷ் காலத்தில் நடைபெற்ற அதிகபட்ச தண்டனை எப்படி எல்லாம் வழங்கப்பட்டதோ அதே மாதிரி யான தன்மையை இந்தக் கூட்டத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களையும் குற்ற வாளியாக ஆக்குவதை நோக்கமாகவே கொண்டு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது, ஒவ்வொரு தொழிலாளிக்கு கிட்டத் தட்ட 100 வகையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு அவர்களு டைய சம்பளம், அவர்களுடைய ஓய்வு கால பலன்கள் எல்லாம் பாதிக்கப்படக்கூடிய வகையில் மிகப் பெரியகொடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த தொழிற்சங்கத்தின் சார்பாக பல தண்டனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தொழிலாளர் நலத்துறையில் வழக்கு தொடுத்திருக்கிறோம்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் நேரடியாக இயங்கக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனமாக போக்குவரத்து துறை உள்ளது.
ஒரு பொதுத்துறை நிறுவனம் மத்தவங்களுக்கு ரோல் மாடலாக தொழிலாளர்களை நடத்த வேண்டும். எந்தவிதமான நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், அரசனுடைய உத்தரவு களையும் முழுமையா மதிக்கும் பழக்கமே கிடையாது. தண்டனைகள் மட்டும் தான் வந்து அவங்களுக்கு அதிகப்ப டியாக கொடுக்க தெரிகிறது.
நிலையாணையில் இருக்கக்கூடிய நல்ல அம்சங்களை எல்லாம் கவனிக்காமல், தொழிலாளிகளுக்கு விரோதமாக தண்டனை கொடுப்பதற்கு என்னென்ன பாயிண்ட்ஸ் இருக்கோ அதையெல்லாம் முழுமையா பயன்படுத்தி, எல்லா தொழிலாளிகளையும் குற்றவாளி ஆக்கி தொழிலாளிகள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
சிலபேர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்காங்க, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் அவர்கள் எல்லாரும் வேலை பாத்துட்டு இருக்காங்க.சமீபத்தில் வேலை நிறுத்தம் பற்றி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க, ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை நிறுத்தம் அப்படிங்கிறது எதுக்காக நடக்கிறது என்பதை பொது மக்கள் சிந்திக்க வேண்டும்..
ஓய்வு பெறும் போது, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பயனை எதையும் முறையாக கொடுப்பதில்லை. அவங்களுக்கு சேர வேண்டிய பிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி பணம் அதையும் கொடுப்பதில்லை. இருக்கக்கூடிய பேலன்ஸ் லீவையும் கொடுக்க முடிவதில்லை. தேவையில்லாத வாய்மொழி சட்டங்களை திணிக்கின்றனர். வருடா வருடம் வழங்க வேண்டிய டிஏ கடந்த அதிமுக கட்சியில் இருந்து கொடுக்கப்படவில்லை. இது திமுக ஆட்சியிலும் தொடர்கிறது.
திமுக ஆட்சிக்கு வரும்போது 100 நாட்களில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்த விஷயத்தையும் பேசவில்லை.
பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதற்கான இழப்பை அரசு வழங்க வேண்டும். சம்பள உயர்வுக்கான 15 வது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொழிலாளர் துறையில் உள்ள வழக்குகளை சந்தித்து நிர்வாகம் நல்ல ஒரு தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அனைத்து தொழிலாளர்களையும் நேரடியாக அரசுத்துறை ஊழியராக மாற்றிட வேண்டும், விதிக்கப்பட்ட தண்டனைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும், 01/04/2003 பிறகு சேர்ந்த தொழிலாளர்களை சிபிஎஸ் என்கிற புது பென்ஷன் திட்டத்தில் சேர்த்துள்ளனர்.
அவர்களையும் பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்ற வேண்டும். ஆல் பற்றாக்குறையை நிரந்த தொழிலாளர்கள் மூலம் நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தும் தற்போது தின கூலிக்கு ஆட்கள் சேர்ப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்றார்