Close
நவம்பர் 21, 2024 11:31 மணி

சர்வதேச யோகா போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற புதுக்கோட்டை ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி

தமிழ்நாடு

யோகா போட்டியில் சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் வென்ற புதுக்கோட்டை ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஸ்ரீலங்கா நேசனல் யோகா அசோசியேசன், ஆசியன் யோகா பெடரேஷன், கொழும்பு சிவ விஷ்ணு யோகா பீடம் இணைந்து நடத்திய சர்வதேச யோகா போட்டி – 2024-ல்  மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான்.ஹாங்காங், அமெரிக்கா போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்றனர்.
இதில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி யின் ஆத்மா யோகா மாணவர் மன்றத்தின் மாணவர்கள் பரிசுகளும் சாம்பியன் பட்டமும் வென்று சாதனைகள் புரிந்தனர்.
தமிழ்நாடு
யோகா போட்டியில் சர்வதேச சாம்பியன் பட்டம் வென்ற புதுக்கோட்டை ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்.
இதில் ஒட்டு மொத்தமாக ஆண்களுக்கான பிரிவில் பா. சஞ்சீத் பாபு சர்வதேச யோகாசன சாம்பியன் – 2024 பட்டம் வெற்று சாதனை புரிந்தார்.8-வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில்
பா. சுர்ஜீத் பாபு முதலிடமும்  பிடித்து பள்ளிக்கும், இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவர்களுக்கு ஸ்ரீலங்கா கல்வி இலாக்கா அமைச்சர் ஏ. அரவிந்த குமார், சாம்பியன் கேப்பை மற்றும் சான்றிதழுடன் பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் , இந்திய தூதரகச் செயலாளர் நவ்யா சிங்லா  ஆகியோரும் வெற்றி பெற்றவர் களைப் பாராட்டினார்கள்.
தமிழ்நாடு
யோகா போட்டியில் சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் வென்ற புதுக்கோட்டை ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவ விஷ்னு யோகா பீடத்தின் நிறுவனர் யோகாச்சார்யா ராஜ்குமார் அவர்களும், ஆசியன் யோகா பெடரேஷன் பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, துணை முதல்வர் எஸ். குமாரவேல், ஆத்மா யோகா மைய நிறுவனர் யோகா ரெ. பாண்டியன், திருமதி புவனேஸ்வரி பாண்டியன்ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top