Close
நவம்பர் 22, 2024 4:59 காலை

குழிபிறை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை

குழிபிறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு

குழிபிறை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குழிபிறை ஊராட்சியில் நகரத்தார்களுக்குச்சொந்தமான அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

குழிபிறை நகரத்தார்களுக்குப்பாத்தியப்பட்ட அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பழமை மாறாமல் சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததையடுத்து  கோயிலில் 11.2.2024 அன்று தமிழ்முறைப்படியும், ஆகம முறைப்படியும்  குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப் பட்டது.

அதன்படி, கோயிலருகே  இரண்டு யாகசாலைகள் அமைக்கப் பட்டன. இந்த யாகசாலைகளில் ( 8.2.2024) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மங்கள இசை, திருமுறை பண்ணி சை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜைகள் தொடங்கியது.

புதுக்கோட்டை
யாகசாலை பூஜையில் சிவத்திரு தண்டபாணி தேசிகர்

(9.2.2024) வெள்ளிக்கிழமை காலையில் இரண்டாம் கால யாக பூஜையும் மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடை பெற்றது. (10.2.2024) சனிக்கிழமை காலையில் நான்காம் கால யாகபூஜையும், மாலையில் ஐந்தாம்கால யாகபூஜையும்நடை பெற்றது. (11.2.2024) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆறாம் கால யாக பூஜை நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித நீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து சென்று மூலவர் சுந்தரேஸ்வர், மீனாட்சி அம்மன் ஆகிய கோபுரங் களில் உள்ள கும்பத்தில் காலை 9.45 மணியளவில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினர்.

புதுக்கோட்டை
குடமுழுக்கு விழாவில் நடைபெற்ற திருக்குட ஊர்வலம்

இதே போல நடராஜர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் மீனாட்சி-சுந்தரேஸ்வருக்கு திருக்கல்யாணமும், இரவு 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடை பெற்றது.

குடமுழுக்கை தமிழ்முறைப்படி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் குமார. தண்டபாணி தேசிகர் தலைமையிலான குழுவினரும், ஆகமங்களின்படி கரூர் ஆரியூர் செல்லாண்டி யம்மன் கோயில் அர்ச்சகர் சதாசிவசிவம் தலைமையிலான சிவாச்சாரியார்களும் நடத்தி வைத்தனர்.

புதுக்கோட்டை

விழாவைக்காண, புதுக்கோட்டை, திருமயம், பொன்னமரா வதி, ராங்கியம், புதுக்கோட்டை, நற்சாந்துபட்டி, பனையப் பட்டி, விராச்சிலை உள்பட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வந்திருந்தனர். இதையொட்டி பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை
குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

விழா ஏற்பாடுகளை குழிபிறை நகரத்தார் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னராவதி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையில் திருமயம், பனையபட்டி , நமனசமுத்திரம் போலீஸார் மற்றும ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.இதையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top