புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மகிளா காங்கிரல் மாநாடு அதன் தெற்கு மாவட்டத்தலைவி சிவந்தி நடராஜன் தலைமையில் (17. 2 .2024) சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, திருவரங்குளம் ஊராட்சி தோப்பு கொல்லை, சிவந்தி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன் தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமசுப்புராம், மாநிலச் செயலாளர் பென்னட் அந்தோணி ராஜ், மாநில எஸ்சி எஸ்டி பிரிவினுடைய துணைத் தலைவர் டி. கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகிளா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நடைபெறவிருக்கின்ற 2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினுடைய வெற்றிக்காகவும் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கவும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்காலம்பா, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர்சுதா ராமகிருஷ்ணன் ஆகியோருடைய வழிகாட்டுதலில் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி திருச்சி பாராளுமன்ற தொகுதி இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்குவதற்கு தலைமையிடம் கேட்டுக் கொள்வது.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில்கார்த்தி ப சிதம்பரம்,
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சு திருநாவுக்கரசர் ஆகியோரை வேட்பாளராக போட்டியிட காங்கிரஸ் கட்சித்தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கும், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்கும் திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசரின் வெற்றிக்கும் மகிளா காங்கிரஸ் கடுமையாக உழைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இந்த மாநாட்டில், நிர்வாகிகள், மணிகண்டன், வி முருகேசன்
சி.கே.பன்னீர்செல்வம், அரங்குளவன், பூங்குன்றன், அன்பழகன், மயில்வாகணன், சுப்ரமணியன், ஜமால்முகமது மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மகாலெட்சுமி, மலர்கொடி, ராஜேஸ்வரி, அமராவதி, தவமணி, சுமத்திரா தேவி உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட துணைத் தலைவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.