புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், துவார் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ரவீந்திரன் அனைவரையும் வரவேற்றார்.இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா பங்கேற்று பேசியதாவது:
மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டும் தான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் மொழி என்பது நம் பண்பாட்டு அடையாளம். இந்த உலகத்திற்கும் அதில் வாழும் மக்களுக்கும் மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளம்.
ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழிதான்.இதனை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினம் என சிறப்பிக்கிறது .
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.மாணவர் தமிழில் கையெழுத்து இட வேண்டும் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கிறிஸ்டின் நேசகுமாரி,கியானா தன்னார்வலர்கள் சத்யா தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.