Close
செப்டம்பர் 20, 2024 5:57 காலை

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் வேலாடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வேலாடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது:
சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது உலகம் எங்கிலும் பரவி கடுமையான பேரிடர்களை உண்டாக்கி உயிரினங்களின் வாழ்விற்கும் மனிதர்களின் வாழ்விற்கும் அச்சுறுத்துதலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த உலகில் வாழும் மக்கள் அசுத்தமான காற்று, மாசுபட்ட தண்ணீர் மற்றும் ஒலியின் பேரிரைச்சல் ஆகியவற்றுடனே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உலகில் பல மில்லியன் மக்கள் சுற்றுச்சூழல் மாசினால் பாதிப்படைந்து வருகிறார்கள்.

மனிதர்கள் பயன்படுத்தி விட்டு வீசப்படும் பாலித்தீன் பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் இந்த நிலத்தில் பல சேதத்தை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் எத்தனை ஆண்டானாலும் மக்காதவை என்று நம் அனைவருக்குமே தெரியும். இருந்தும் நாம் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த மட்காத பொருட்கள் தான் நிலம் மாசைடைய முக்கிய காரணமாக இருக்கிறது.

மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். சிறப்பான ஓவியம் வரைந்த மாணவர்கள் அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்பட் டனர். ஏற்பாடுகளை தன்னார்வலர் ஷீலாராணி செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top