Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

சர் சி.வி. ராமன்… ஒரு சிறந்த தேசியவாதி..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- சர்.சி.வி. இராமன்

ராமன் ஒரு சிறந்த தேசியவாதி.ராமன் நல்ல பேச்சாளர். எப்படிப்பட்ட சிக்கலான விஷயங்களையும் எளிதிலே புரிந்து கொள்ளும்படி பேசும் ஆற்றலுடையவர்.

நூல்களை விரைவாகப் படிப்பதிலும், அப்படிப் படிக்கிறபோது தன் மனத்தை வேறெங்கும் செலுத்த விடாமல் பாதுகாத்துக் கொள்வதிலும் ராமன் மகாக் கெட்டிக்காரர். விஞ்ஞான சாஸ்திர நிபுணர்கள், அனைவரும் மனத்தை ஒரு முகப்படுத்தி வைக்கிற சக்தியை பரிபூரணமாய்ப் பெற்றிருக்கிறார்கள். இதனால்தான் சில சமயங்களில் இவர்கள் பித்தர்கள் போல் காணப்படுகிறார்கள். இவர்களுடைய பார்வை எங்கேயே போய் லயித்து விடுகிறது (பக் .20-21).

பிப்.28, “தேசிய அறிவியல் தினம்”. சர் சி.வி. இராமன், 1928 ஆம் ஆண்டு பிப்.28 அன்று, இராமன் விளைவு Raman Effect என்ற அறிவியல் கண்டு பிடிப்பை நிகழ்த்தியதை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

“தமிழர்களை அறிவாளிகளாக ஆக்க வேண்டும் என்பதற் காகவே எழுதியவர் சாமிநாத சர்மா ” என்பார் கண்ணதாசன். அப்படிப் பட்ட சர்மா, சர்.சி.வி. இராமன் பற்றி எழுதிய உயிரோவியம் தான் இந்த நூல். இராமனின் வாழ்க்கை வரலாறு, அவருடைய கண்டுபிடிப்புகள் யாவற்றையும் இனிய தமிழில் சித்திரமாக்கித் தந்திருக்கிறார் சர்மா.இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top