Close
நவம்பர் 24, 2024 1:41 காலை

புத்தகம் அறிவோம்… கணிதமேதை இராமானுஜன்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- கணித மேதை இராமானுஜன்

அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசீர்வாதம். “கணித மேதை இராமானுஜன்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ‘ரகமி’ அவர்கள் என் கணவரின் சரிதத்தை எளிய நடையில் ஜனரஞ்சகமாகவும் மனமுருகும் வகையிலும் எழுதியிருக்கிறார்.என் கணவரைப் பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இதை விட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே நம்மவர்கள் என் கணவரைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும் என மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!”

ஜானகி ராமானுஜன்(பக்.9).

“காளிதாசனுக்கு காளி நாக்கில் எழுதி வரம் கொடுத்து அவரது சொல்வன்மை வந்தது என்பர்; அது போல நாமகிரி தாயார் கொடுத்த வரம் அல்ல இராமானுஜத்தின் கணிதம் . கடும் உழைப்பு;, தீவிர படிப்பு; கல்விமான்களுடன் உரையாடல்; அடுத்தவரிடமிருந்து கற்றல் என்பது தான் ராமானுஜத்தின் ரகசியம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்பது போல கடுமையான உழைப்பு தான் ராமானுஜத்தின் வெற்றியின் பின் உள்ள ரகசியம். “-த.வி.வெங்கடேஸ்வரன்(பக் . 169).

கணித மேதை ராமானுஜத்தின் 100 -ஆவது ஆண்டை ஒட்டி, பிரபல பத்திரிக்கையாளர் ‘ரகமி’என்றழைக்கப்படும் டி.வி.ரங்கசுவாமி தினமணிக்கதிரில் எழுதிய ராமனுஜத்தின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்தான் “கணித மேதை ராமானுஜன்”.
அது ராமனுஜத்தின் 125-ஆவது பிறந்த தினத்தின் சிறப்பு வெளியீடாக, அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களின் விளக்கக் குறிப்போடும், கட்டுரையோடும் அவரின் தொகுப்பாக பாரதி புத்தகாலயம் 2012 -ல் வெளியிட்டுள்ளதுதான் இந்த புதிய நூல்.

ரகமியின் மூல நூலோடு, வெங்கடேஸ்வரனின் கூடுதல் விபரங்கள், அவரின், யார் இந்த ராமானுஜம் ? கட்டுரை, வாழ்க்கைக் குறிப்பு, ராமனுசத்தின் கணிதம் பற்றிய விளக்கங்கள் இந்த நூலின் சிறப்பு.அனைவரும் குறிப்பாக மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.வெளியீடு-பாரதி புத்தகாலயம், சென்னை. 044 – 24332424. ரூ.170/-

#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top