Close
நவம்பர் 21, 2024 10:09 மணி

கந்தர்வகோட்டை அருகே உலக வனவிலங்கு தினம் கடைபிடிப்பு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலகக் காட்டுயிரி தினம் கடைப்பிடிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலகக் காட்டுயிரி (வனவிலங்குகள்) தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது:

குறைந்து கொண்டே வரும் வரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68 -ஆவது அமர்வில் காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம் மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

காட்டுயிர் என்பது காடுகளில் மட்டுமே வாழும் உயிரினம் என்று நினைக்க வேண்டாம். மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களாக, மனிதர்களை நம்பி வாழும் உயிரினங்களாக இல்லாமல் மனிதர்கள் அருகிலேயே இயற்கை சூழலில் இரையைத் தேடி வாழும் உயிரினங்கள் அனைத்தும் காட்டுயிராகும் .காடுகள் என்பது உயிரினங்கள் மிகுதியாக இருக்கும் இடம் மட்டுமே. இயற்கையாகவே உலகமே ஒரு காடுதான். காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டுமென பேசினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் இலக்கியா செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top