Close
நவம்பர் 21, 2024 11:49 மணி

ஆந்திராவில் பாஜவுடன் கூட்டணி : முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி

Andhra Election Alliance Of TDP

ஆந்திர சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் பாஜ ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின்  தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி  போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில்  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஓய்எஸ்ஆர்  காங்கிரஸ் ஆட்சியானது நடந்து வருகிறது. கடந்த 2018 ம் ஆண்டில் ஆந்திராவில்  பாஜ தலைமையிலான  தேஜ கூட்டணியில் இருந்து பிரிந்த அந்த மாநில  முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மீண்டும் அதில் இணைவதற்கான நடவடிக்கையினை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு தீவிரப்படுத்தி வந்தது.

Andhra Election Alliance Of TDP

மாநில அரசியலில்  தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனாவுடன் கூட்டணி வைத்திருந்த சந்திரபாபு நாயுடு  ஆறுஆண்டுகளுக்கு பின்  பாஜவுடன் கூட்டணி சேர முடிவெடுத்து கடந்த சில  நாட்களாகவே டில்லியில் முகாமிட்டிருந்தார்.

மத்திய  அமைச்சர் அமித்ஷாவை நடிகர் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாடுயு ஆகியோர்சந்தித்து  கூட்டணி குறித்து பேசிய நிலையில்  மீண்டும் ஆலோசனை நடத்தினர். பாஜ தேசிய தலைவர் நட்டாவும்  இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.

பாஜவுடன் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகியவை கூட்டணி அமைத்து ஆந்திர மாநிலத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடுகூறும்போது,

மீண்டும் தேஜ கூட்டணியில்  நாங்கள் இணைகிறோம். நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் எங்களுடன் கூட்டணியில் இணைந்துள்ளது.கடந்த  ஐந்தாண்டுகளாகவே ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில்  அனைத்து  துறைகளிலும் ஆந்திர அரசானது தோல்வியைக் கண்டுள்ளது.

நடக்க உள்ள தேர்தல்களில் எங்களுடைய கூட்டணியானது அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.

Andhra Election Alliance Of TDP

 

டில்லி அரசியல் வட்டாரத்தில்

லோக்சபா மற்றும் ஆந்திர சட்டசபைதேர்தலின் கூட்டணி குறித்து 3 கட்சித்தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் மொத்தமுள்ள 25 லோக்சபா தொகுதிகளில் ஆறு இடங்களில் பாஜவும், இரண்டு இடங்களில்  ஜனசேனாவும்  போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 17 இடங்களில் தெலுங்கு தேச கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.

மொத்தமுள்ள  175 சட்டசபை தொகுதிகளில் 30 தொகுதிகளில் பாஜ, மற்றும் ஜனசேனாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ள தெலுங்கு தேசம் 145 தொகுதியில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி, ராஜம்பேட், திருப்பதி மட்டுமின்றி  மேலும் ஒரு முக்கிய தொகுதியை பாஜ  கேட்பதால்  பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது என டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top