Close
நவம்பர் 21, 2024 11:39 மணி

புத்தகம் அறிவோம்.. பாரதி மொழிபெயர்த்த பகவத் கீதை..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- பகவத்கீதை

பகவத் கீதை.

“ஸ்ரீமத் பகவத் கீதையின் இத்தமிழ் மொழிபெயர்ப்பு எத்தகையது என உரைக்க எனக்கு போதுமான தமிழ் ஞானமில்லை. ஆயினும், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவனும் ஸ்ரீமத் பகவத் கீதையைப் பாராயணம் பண்ணாது
ஒருநாளாயினும் கடத்தல் கூடாது. இத்தகையோருக்கு இம் மொழிபெயர்ப்புடன் கூடிய கீதை பெரிதும் பயன்படும். “1928 ஆம் ஆண்டு பாரதி பிரசுலாயத்தாரால் கையடக்கப் பதிப்பாக வெளியிடப்பட்ட பகவத்கீதைக்கு காந்தி அளித்த அணிந்துரை(பக்.4).

கீதையின் மகத்தான உபதேசம்

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற வேதாந்தத்தை கீதை ஆதாரமாக உடையது.சரணாகதியால் – கடவுளிடம் தீராத – மாறாத பக்தியால் – யோகத்தை எய்துவீர்கள்.எல்லா ஜீவர்களையும் ஸமமாகக் கருதக் கடவீர். அதனால் விடுதலை அடைவீர்கள்.ஸத்வ விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள்.இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மையடைவீர்கள்.இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.-பகவத் கீதை முன்னுரையில் பாரதி.(பக்.7).
வெளியீடு-சீனி.விசுவநாதன்,2, மாடல் ஹவுஸ் லேன்,சி.ஐ.டி. நகர்,சென்னை. 25.
044-24315757. விலை ரூ.60.

# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை-  புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top