Close
நவம்பர் 24, 2024 5:44 மணி

இரட்டை இலைக்கு சிக்கல்..!! வேறு சின்னத்தில் போட்டியிடும் அதிமுக..?

தேர்தல் ஆணையம் (கோப்பு படம்)

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.

உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தான் தொடர்ந்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால், தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில் மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் தான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 25ஆம் தேதி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விளக்கம் கேட்டு எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top