Close
அக்டோபர் 5, 2024 10:28 மணி

திருவொற்றியூரில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டப் பணிகள் தொடக்கம்

சென்னை

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டிய திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர்.

 சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் திருவொற்றியூரில் அமைக்கப்பட உள்ள ரூ.35 கோடி மதிப்பீட்டிலான கடற்கரை பூங்கா அமைக்கும் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர்  அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திருவொற்றியூர் பாரதியார் நகர் முதல் மஸ்தான் கோவில் வரை ரூ. 35 கோடி செலவில் கடற்கரை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தின்படி சென்னை பாரதியார் நகர் முதல் மஸ்தான் கோயில் தெரு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 28 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கடற்கரை பூங்கா உள்ளிட்ட பணிகள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் இத்திட்டத்தில் சுமார் 350  சதுர மீட்டர் கட்டட பணிகளும் அடங்கும்.
 இக்கடற்கரை பூங்காவில் குழந்தைகள் விளையாடும் திடல்,  கைப்பந்து – கபடி மைதானம், குத்துசண்டை வளாகம், உடற்பயிற்சி கூடம், தியான மண்டபம், சாலையோர வியாபாரிகளுக்கான தளம்.
சிற்பங்கள், கடைகள், சூரிய மின் விளக்குகள், கண்காணிப்பு கேமரா, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கானஐந்து ஒப்பனை அறைகள், தர்ப்படம் எடுக்கும் இடம்,  நடைபாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா  திருவொற்றியூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் திட்ட  பணிகளைத் தொடர்ந்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் பரமேஸ்வரி மாமன்ற உறுப்பினர் கே பி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top