Close
நவம்பர் 22, 2024 4:42 காலை

அரசு பள்ளியில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: எம்எல்ஏ பேச்சு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய கந்தர்வகோட்டை எம்எல்ஏ- சின்னத்துரை

அரசு பள்ளியில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டஅறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற தலைமை ஆசிரியர் பழனிவேலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன்  வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மேலும் பேசியதாவது:

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வி பயில வேண்டும், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அந்தத் திட்டங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிகள் தற்போது அசுர பலத்தோடு வளர்ந்து வருகிறது அரசு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்துவது இதற்கு மிக முக்கியமான காரணமாகும். அதுமட்டுமில்லாமல் உயர் கல்வி பயிலக்கூடிய பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆண்களுக்கான தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் உயர் கல்வி பயிலக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் அவர்.

இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் ரத்தினவேல் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பரமசிவம், அட்மா கமிட்டி தலைவர் ராஜேந்திரன், கந்தர்வகோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மேலாண்மை குழு தலைவி வனிதா, துணைத்தலைவர் இளவரசன், உறுப்பினர் முரளிதரன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார், பாரதிதாசன் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா உள்ளிட்டோர் வாழ்த்தினர்.  உதவித் தலைமை ஆசிரியர் தெய்வீகன் நன்றி கூறினார். விழாவை உதவித் தலைமை ஆசிரியர் குமரவேல், தமிழாசிரியர் செல்வமணி, பாலமுருகன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top