Close
நவம்பர் 21, 2024 10:29 காலை

புத்தகம் அறிவோம்.. டாக்டர் அன்னி பெசன்ட் தீர்க்கதரிசி..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- அன்னிபெசன்ட் தீர்க்கதரிசி

நம் நண்பன் ஒரு அயோக்கியனாயிருந்தால்அவனிடம் யோக்கியமாயிருக்க வேண்டும்;ஒரு விரோதி நமக்கு தீங்கு செய்தால்நாம் அவனை மன்னித்துவிட வேண்டும்;ஒரு நண்பன் நமக்கு துரோகம் செய்தால்நாம அவனை ஆதரிக்க வேண்டும்;அப்போதுதான் நம் உள்ளே மறைந்திருக்கும் இறைவன் நம்மிடையே பிரகாசிப்பார்

மேல் காணும் அவரது ஆதமார்த்தமான வாசகங்கள் அவர் தம் வாழ்க்கையில் மேற்கொண்ட கொள்கையைப் பிரதிபலிக்கின்றன(பக்.10).

காலந்தவறாமை :தம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு சிறிதும் காலம் தவற மாட்டார். உதாரணமாக வாரணாசி பழைய மத்திய இந்துக் கல்லூரியில் தொடர்ந்து சொற்பொழிவாற்றச் செல்லும்போது உரிய நேரத்திற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பாக அங்கு செல்வார். அவர் வரவைக் கண்டு மக்கள் தங்கள் கடிகாரத்தை சரி செய்து கொள்வார்கள்(பக். 11).

என் காலத்திலும், எம் முன்னோர் காலத்திலும், எம் அனைவராலும் கவரபபட்ட உயர்ந்த பெரியவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பெரும்பணி மகத்தானது. -ஜவஹர்லால் நேரு.

பெசன்ட் அம்மையார் இந்தியாவுக்கு வந்து, நாடே அவரைப் பெரிதும் கவர்ந்த போது, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எங்களுக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவர் பால் நான் கொண்டுள்ள விசுவாசமும் மதிப்பும் எள்ளளவும் குறைந்ததல்ல. -மகாத்மா காந்தி(பக்.12).

1.10.1847 அன்று லண்டனில் அனி உட் என்ற பெயர் கொண்டு பிறந்த அன்னி பெசன்ட் அம்மையார் 1893 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவிற்கு வந்தார்.அவர் இந்தியாவிற்கு வந்த நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 1993 -ஆம் ஆண்டு , மத்திய அரசின் பப்ளிகேஷன் டிவிஷனால் வெளியிடப்பட்ட நூல் தான் “டாக்டர் அன்னி பெசன்ட் தீர்க்கதரிசி “.

டாக்டர் அன்னி பெசன்ட், சகோதரி நிவேதிதா போன்றவர்கள் ஆங்கில தேசத்தில் பிறந்தாலும், இந்திய தேசத்தையும், மக்களையும் மிகவும் நேசித்தவர்கள். அவர்களின் மேம்பாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

பெசன்ட் அம்மையார் இந்திய நாட்டிற்கு வந்த நாள் முதற் கொண்டு இந்தியப் பிரசையாகவே வாழ்ந்தார். புடைவை கட்டிக் கொண்டார். கால்களை மடித்துத் தரையிலே உட்காருவார்.உணவு உண்ணும் போது தரையிலேயே உட்கார்ந்து சாப்பிடுவார். மேல்நாட்டினரைப் போல், சிறு கரண்டி, முட்கரண்டிகளை உபயோகிக்காமால் கையினால் பிசைந்து சாப்பிடுவார்.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் பெசன்ட். இவருக்குப் பின் ஐரோப்பாவிலிருந்த வந்த ஒரு பெண் காங்கிரஸ் தலைவர் ஆனது சோனியா காந்தி.இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை Home rule movement தொடங்கியவர். இந்தியப் பெண்களின் கல்விக்கு பல முன்னெடுப்புகளைச் செய்தவர் என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் பெசண்ட். போற்றுதலுக்குரிய அந்த தலைவரின் பெருமைகளைப் பேசும் நூல் தான் இது.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top