Close
நவம்பர் 21, 2024 6:34 மணி

இங்கிலாந்தின் இலையுதிர் காலக்கடைசியில் துலிப் மலர்கள்..

இங்கிலாந்திலிருந்து சங்கர்

இலையுதிர் கால இறுதியில் பூத்த துலிப் மலர்கள்

டெஃபோடில் மற்றும் துலிப் மலர்கள்.இங்கிலாந்தின் இலையுதிர் காலக்கடைசியில் கொஞ்சம்டாஃபோடில் மற்றும் துலிப் பல்புகள்வாங்கி தோட்டத்து வேலியை ஒட்டி நட்டு வைத்தேன். சுமார் 4 மாதங்களில் நட்டு வைத்ததில் சில முளைத்துபூ பூக்க ஆரம்பித்து விட்டது.

இந்த இரு மலர்களும் பூத்து குலுங்கினால், குளிர் குறைந்து தட்பவெட்பம் இதமாகும் சூழலுக்கான அறிகுறி.நெதர்லாந்து, இங்கிலாந்து, வட அமெரிக்காவில் துலிப் மலர், வசந்தத்தை வரவேற்கும் மலராக கொண்டாடப்படுகிறது.சமஸ்கிருத மொழியில் தாமரையும், உருதுக் கவிதைகளில் ரோஜாவும், சங்க இலக்கியத்தில் முல்லையும் இடம் பெறுவது போன்று பெர்ஷியக் கவிதைகளில், துலிப் மலர் முதன்மை பெறுகிறது.

ஸ்பெயின், போர்ச்சுக்கல், துருக்கி போன்ற பிரதேசங்களில் இருந்துதான் டாஃபோடிலின் மூத்தகுடி வந்திருக்கும் என ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. காலம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு!ரோமானியர்களும், கிரீஸ் நாட்டுக்காரர்களும் , மருத்துவ குணமிருக்கிற காரணத்தால்இதை நிறையப் பயன்படுத்தி இருக்கிறார்கள். டெஃபோடில் பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் இங்கிலாந்திற்கு வந்தது ரோமானியர்கள் தயவால்.

விதைப்பதும் பராமரிப்பதும் நம் வேலை, அவை எவ்வளவு நன்றாக பூக்கும் என்பதை தீர்மானிக்கும் காரணியாக இருப்பது இயற்கை தான்.இயற்கையை மிஞ்சி எதுவுமில்லை.

இதமான வசந்த காலத்தில்மிதமான குளிர் நாட்களில் மலர்கள்எல்லாமே அதற்கே உரித்தான சிறப்பியல்பு அம்சங்களுடன்அழகாக தான் இருக்கிறது.எல்லா மலர்களும் எழிலானவைஅனைத்து பூக்களும் அழகானவை.ஒரு பூ மற்றொன்றை விட சிறந்தது என்று எப்படி சொல்வது!!

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top