Close
நவம்பர் 22, 2024 4:05 காலை

கந்தர்வகோட்டை அருகே சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே நடைபெற்ற சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சமுத்திரப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் பேசியதாவது:
சுற்றுச்சூழலின் தன்மை மற்றும் அதன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதே சுற்றுச்சூழல் விழிப்புணர்வாகும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவித்தல் என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு எளிய வழியாகும், மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி என்பது வரும் தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு உணர்த்துவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் கல்வி கற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காற்று மாசுபடுவதற்கு மற்றொரு காரணம் படிமஎரிபொருள் அதனால் நச்சு வாயுக்கள் வெளியாகி, புவி வெப்பமாகிறது. காற்று மாசினால் நகரங்களிள் வாழும் மக்களிடையே மரபுவழி குறைபாடுகள் ஏற்படும் என கண்டறிந்துள்ளனர். புவி வெப்பமயமாதலால் தாவரங்களிள் உற்பத்தியை பாதித்து எதிர்காலத்தில் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை சமிக்கைகள் கொடுக்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.

சுற்றுச்சூழல் சூழலை பாதுகாக்க எரிபொருளை சிக்கனமாக, தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவது, காலார நடந்து செல்வது, மிதிவண்டியை பயன்படுத்துவது, மகிழுந்து, வான வேடிக்கைகளை தவிர்ப்பது, குப்பைகள் எரிப்பதை தவிர்பப்து போன்ற செயல்களை மிகுதியாக கையாள வேண்டும் என்றார் அவர். முன்னதாக தன்னார்வலர் இளவரசி அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் தன்னாவலர்கள் கலைவாணி, கெளசல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top