Close
நவம்பர் 24, 2024 4:18 மணி

புதுக்கோட்டை கிளை    இந்திய மருத்துவ சங்கத்தில்  தொடர் மருத்துவ கருத்தரங்கம்,  விருது வழங்கும் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்ககிளையில் நடைபெற்ற பாராட்டு விழா

புதுக்கோட்டை கிளை    இந்திய மருத்துவ சங்கத்தில்   தொடர் மருத்துவ கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா  ஐ எம் ஏ  அரங்கில்   நடைபெற்றது.
விழாவிற்கு    தலைவர் டாக்டர் முகமது சுல்தான் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் ராஜா அனைவரையும்  வரவேற்று கிளையின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப்பேசினார்.
விழாவில்,   சென்ற ஆண்டு மகளிர் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் ஜானகி, டாக்டர்கோமதி, டாக்டர் தையல்நாயகி, டாக்டர் இந்திராணி, டாக்டர்.மகேஸ்வரி, டாக்டர் மாலதி, டாக்டர் சங்கீதா,டாக்டர் மகேஸ்வரி, டாக்டர் ஹேமா, டாக்டர் பாரதி, டாக்டர் ஹேமாஹரிணி, டாக்டர் ராணி, டாக்டர் சமீனாபேகம், டாக்டர் அசினாமேகம், டாக்டர் ஜோதி, டாக்டர் திவ்யா  ஆகிய மருத்துவர்களுக்கும்  அரசு பணியில் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற டாக்டர் சலீம்அப்துல்குத்தூஸ் மற்றும் டாக்டர் வைரமணி ஆகியோருக்கும் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஐஎம்ஏ சங்கக் கிளை விழா

பின்னர் நடைபெற்ற தொடர் மருத்துவ கருத்தரங்கில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைஇருதய பிரிவு சிறப்பு  ஆலோசகர்  டாக்டர் சபரி கிருஷ்ணன், விஷ தாவரங்களை சாப்பிடுவதால்  இருதயத்தில் ஏற்படும் பாதிப்பு பற்றியும், அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது பற்றியும் திரை மூலம்   விளக்கி கூறினார்.

மேலும் மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரகப் பிரிவு   மூத்த ஆலோசகர் டாக்டர் பிரவீன் காணொளி திரை மூலம் மருத்துவ   சிகிச்சை அளிப்பது பற்றி விளக்கிக் கூறினார்.
இதில்,  மருத்துவர்கள் சுவாமிநாதன்,ரவிக்குமார்  நவரத்தினசாமி,சுரேஷ் குமார்  ராம்ராஜ், ராமமூர்த்தி   எட்வின், உள்ளிட்ட  மூத்த மருத்துவர்கள்  கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை இந்திய மருத்துவ சங்கத்தின்  நிர்வாகிகள்  மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மேலாளர் சண்முகராஜன் துணை மேலாளர் அன்பு ராஜன் ஆகியோர் செய்தனர். ஆசிரியர்  முருகேசன் விழாவை தொகுத்து வழங்கினார்.   நிறைவாக கிளை நிதி செயலாளர்    டாக்டர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top