Close
நவம்பர் 23, 2024 1:43 மணி

தேர்தல் திருவிழாவின் கடைசி நாள்..! முடிசூட்டுவது யார்..?

தேர்தல் முடிவுகள் 2024

தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை வகித்தது. 18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான ஜனநாயகத் திருவிழா எனும் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரை இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது தமிழகத்தை பொறுத்தவரை முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நாளில் வாக்கு பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இந்தியா முழுவதும் 64 கோடி பேர் வாக்களித்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நேற்று அளித்த பேட்டியில் பெருமையாக கூறினார்.

இது உலக அளவில் மிகப்பெரிய சாதனை என்னும் குறிப்பிட்டு இருந்தார் இந்த நிலையில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். ஆனால் அகில இந்திய அளவில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அதாவது தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் சுமார் 300 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 180 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top