கோயம்புத்தூர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சிங்காநல்லூர் மற்றும் வெள்ளலூர் கிளைகள் இணைந்து நடத்தும் நா.முத்துநிலவனின் ’தமிழ் இனிது’ இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா (ஆகஸ்ட் 18 ஞாயிறு மாலை 5 மணியளவில்) கோவை பி.ஆர்.புரம் பாரதி புத்தகாலய அலுவலகம், மேல்தளத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு வெ.பெ.தர்மலிங்கம் தலைமை வகித்தார். மு.காளிநாதன் வரவேற்றார். நூல் அறிமுகம் செய்து பூசாகோ அர கிருஷ்ணம்மாள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் மு.அன்பரசி, ஆர்.வி.எஸ் கல்லூரி பேராசிரியர் ப.சின்னச்சாமி ஆகியோர் நூலினை அறிமுகம் செய்து பேசினர்.
இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியை கசப்பு மருந்தாக கருதி ஒதுக்கி வரும் சூழலில் தமிழ் மொழியின் இனிமையான கூறுகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விதத்திலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் மொழியில் உள்ள எழுத்து பிழைகளை அறிந்து கொள்வதற்கும் எழுத்தாளர் நா.முத்து நிலவன், தி இந்து குழுமத்தின் தமிழ் திசை பத்திரிகையில் வாரந்தோறும் எழுதி வந்த தமிழ் இனிது தொடர் புத்தகமாக வெளி வந்துள்ளது. இந்த புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் மீ.உமா மகேஸ்வரி வாழ்த்தி பேசினார். தமுஎகச மாவட்ட செயலாளர் அ.கரீம், மாவட்ட தலைவர் டி. மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமுருகேசன் சூலூர் பாவேந்தர் பேரவை ஒருங்கிணைப்பாளர் புலவர் செந்தலை ந.கவுதமன் சிறப்புரை ஆற்றினார்.
தமுஎகச மாநில துணைத்தலைவர் நூலாசிரியர் நா.முத்து நிலவன் ஏற்புரையாற்றினார். தமுஎகச மாவட்ட செயலாளர் அ.கரீம், மாவட்ட தலைவர் டி. மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அர. பரணி நன்றி கூறினார். இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் கோவை சிங்காநல்லூர், வெள்ளலூர் கிளைகள் இணைந்து செய்தனர்.