Close
நவம்பர் 22, 2024 4:11 காலை

மத்தி மீன் மத்ததை விட ஏன் சிறந்தது? சுவையில் அரசன்..!

மத்தி மீன் (கோப்பு படம்)

Sardine Fish in Tamil

மத்தி மீன்கள் 25 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும் சிறிய மீன் ஆகும். இவை உலகெங்கிலும் உள்ள கடல்களில் குழுக்களாக வாழும். மத்தி மீனின் இறைச்சி பெரும்பாலும் வறுக்கப்பட்டு சாப்பிடப்படுகிறது. பல வழிகளில் மத்தி மீனை ருசிக்க முடியும். இந்த மீன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

மத்தி மீனின் நன்மைகள்

மத்தி மீனில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரிகள் கொண்ட மத்தி மீன் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாகப் பரிந்துரைக்கப்படுகிறது. சீரான உணவில் மத்தி மீனைச் சேர்ப்பது இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
Sardine Fish in Tamil

மத்தி மீன் ஊட்டச்சத்து விபரம்

100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது.

தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

மத்தி மீனில் வைட்டமின் டி சத்து உள்ளது. இது செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
Sardine Fish in Tamil
மத்தி மீனை சாப்பிடுவதால் கண், இதயம், நீரிழிவு, எலும்பு மற்றும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்மை அடையும்.

வாரம் இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கூடுதலாக மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 நாம் உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை கட்டுபடுத்தி இதய பாதிப்பில் இருந்து நம்மை காப்பற்றி இதயம் பலப்பட உதவும்.

மத்தி மீனில் அயோடின் கலந்த தாதுச்சத்து உள்ளதால் அதை நாம் உணவில் சேந்த்து சாப்பிட்டு வந்தால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
Sardine Fish in Tamil
மத்தி மீனின் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மத்திமீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் குறைபாடு நீங்கி பார்வை திறன் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் டயட்டில் உள்ளவர்கள் வாரம் இரு முறை மத்தி மீனை உணவில் சேர்த்து கொண்டால் நாம் உடலை கட்டு கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
Sardine Fish in Tamil
ஆரோக்கியமான கரு வளர்ச்சி

மத்தி மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கருவின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கிய ஆதரவை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறைந்த ஒமேகா-3 உட்கொள்ளும் பெண்களின் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி தாமதமாகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top