Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பிற மருத்துவமனை களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்,

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் (28.08.2024) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு   முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனையில் வருவாய் துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து பாதுகாப்பு தணிக்கை நடத்தப்படுவது குறித்தும்,   நிறுவப்பட்டுள்ள  சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு பணிகள் குறித்தும்,  மின்விளக்குகள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருவதை உறுதி செய்தல் குறித்தும்,  ஒப்பந்த பாதுகாப்பு பணியாளர்களின் வருகையினை பயோமெட்ரிக் முறையில் கண்காணித்தல் குறித்தும், மருத்துவமனை வளாகங்களில் காவலர்கள் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொள்வது குறித்தும், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் காவலன் செயலி மூலம் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும், மருத்துவக்  கல்லூரியுடன் இணைந்த விடுதிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பினை உறுதி செய்தல் குறித்தும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பாதுகாவலர்கள், பொதுப் பணித்துறை பணியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைவரும் சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்திருத்தல் குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்கும் வகையில் புகார் தெரிவிக்கும் விதமாக உள்குழு அமைத்தல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

எனவே, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை பாதுகாப்பான முறையில் செயல்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள்பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), திரு.ச.சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்), இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) ஜி.ஏ.ராஜ்மோகன், அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஞா.விமலா,

செயற் பொறியாளர் (பொ.ப.து.) (கட்டட (ம) கட்டுமானப் பராமரிப்பு) தி.நாகவேலு, மாவட்ட சுகாதார அலுவலர்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி), மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் இந்திராணி, மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top