சனி கிரகத்தின் அழகு அதன் கம்பீரமான வளையங்களில் உள்ளது. அந்த வளையம் ராட்ஷத வாயு சுற்றி வருவதால் ஏற்படுவதாகும். மேலும் நமது சூரிய குடும்பத்தில் ஒரு தனித்துவமான வான அம்சமாகும்.
17 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது பண்டைய தொலைநோக்கியின் உதவியுடன் முதன்முதலில் சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பார்த்தார்.
இப்போது, புதுமையான நுட்பங்களும் மேம்பட்ட தொழில்நுட்பமும், ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் லூசி ஜோன்ஸ் போன்ற வானியலாளர்களுக்கு, வானத்துக் கோள்களைச் சுற்றியுள்ள புதிர்களை கண்டறிய அல்லது ஆழமாக ஆய்வு செய்வதற்கு உதவுகின்றன.
கண்காணிப்புகள் மற்றும் அதிநவீன ஆராய்ச்சியின் உதவியுடன், விஞ்ஞானிகள் சனியின் வளையங்களில் மறைந்திருக்கும் மர்மங்களைக் கண்டுபிடித்து, அவற்றின் கலவை மற்றும் அதன் வடிவமைப்பில் ஏற்படும் சில மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
சனியின் கம்பீரமான வளையங்கள் ஏன் மறைகின்றன என்பதற்கான காரணங்கள் என்ன?
ஆறு மாதங்களில், ஒரு குறிப்பிடத்தக்க அண்ட நிகழ்வின் காரணமாக சனி கிரகத்தின் மீதான பார்வை வியத்தகு முறையில் மாறுகின்றன.
மார்ச் 2025 முதல், சனியின் கம்பீரமான வளையங்கள் பூமியிலிருந்து கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததாக மாறும். அதாவது பூமியில் இருந்து பார்க்கும்போது சனி கிரகத்தின் அந்த கம்பீர வளையம் நமக்குத் தெரியாது.
இந்த விளைவுகள் நிகழ்வதற்கான காரணம் சனியின் அச்சில் ஒரு தனித்துவமான சாய்வு இருக்கும். இது வளையங்களை நம் பார்வையில் இருந்து மறைத்து வைக்கிறது.
சனி கிரகத்தில் வான மாற்றத்தைக் காணும் குடிமக்கள் மற்றும் வானியலாளர்களுக்கு இது ஒரு அரிய காட்சியாக இருக்கும்.
இருப்பினும், நிலை நிரந்தரமாக இருக்காது. இது 29.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் நிகழும் ஒரு விரைவான அண்ட நிகழ்வாக இருக்கும். இது சூரியனைச் சுற்றி வர சனி எடுக்கும் காலமாகும்.
மார்ச் 2025 க்குப் பிறகு சனியின் அச்சு சாய்வு மாறும். அப்போதில் இருந்து நமது பூமியில் இருந்து மறைந்து இருக்கும் வளையங்கள் மீண்டும் நவம்பர் 2025 இல் தெரியத் தொடங்கும்.
எனவே, வளையங்கள் உண்மையில் மறைந்துவிடாது, ஆனால் ஒளிந்துகொள்ளும் ஒரு வான விளையாட்டு. அது நம் கண்களுக்கு காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு.
சனிக்கோளின் வளையங்கள் எதனால் ஆனது?
சனியின் வளையங்கள் பாறைத்துகள்கள், அண்ட தூசி மற்றும் பனித் துகள்களால் நிரம்பியுள்ளன. இது தொலைநோக்கியின் உதவியுடன் பூமியிலிருந்து பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான காட்சியை அளிக்கிறது.
சனியின் வளையங்கள் ஒரு திடமான அமைப்பு அல்ல. அவை பல்வேறு தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளன. இதில் ஏ, பி மற்றும் சி வளையங்கள் மற்றும் மங்கலான டி, ஈ, எஃப் மற்றும் ஜி வளையங்கள் வரை உள்ளன.
காசினி பிரிவு போன்ற இடைவெளிகள் இந்தப் பிரிவுகளைப் பிரிக்கின்றன. இந்த வளையங்களின் வடிவங்களும் அமைப்புகளும் சனியின் பல நிலவுகளுடன் ஈர்ப்பு விசை தொடர்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.