Close
ஏப்ரல் 4, 2025 10:35 மணி

நல்லாசிரியர் விருது பெற்ற மேலப்பட்டி ஆசிரியர்  மகேஸ்வரன்

தமிழ்நாடு

சென்னை கிரசன்ட் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியிடம் பெறுகிறார், மேலப்பட்டி ஆசிரியர்  மகேஸ்வரன்

புதுக்கோட்டை: தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது- 2024 தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கிரசன்ட் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலப்பட்டி ஆசிரியர்  மகேஸ்வரனுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெள்ளிப் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.  சுமார் 380 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது   வழங்கப்பட்டது. இந்த விழாவில் விளையாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை பற்றி பாராட்டினார்.

தமிழ்நாடு
அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியிடம் விருது பெறுகிறார், மேலப்பட்டி ஆசிரியர்  மகேஸ்வரன்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் அவர்களது சமூக சேவைகளையும் பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் லியோனி,  பள்ளிக்கல்வி இயக்குனர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top