Close
நவம்பர் 24, 2024 12:25 காலை

பப்பாளி பழத்தில் இவ்ளோ நன்மைகள்..! விட்றாதீங்க..அடிக்கடி சாப்பிடுங்க..!

Health Benefits of Papaya in Tamil-பப்பாளி உண்ணும் பெண் (கோப்பு படம்)

Health Benefits of Papaya in Tamil

பப்பாளி பழம் மலிவாக கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும். மேலும் அதில் உள்ள நன்மைகள் அளவற்றதாகும். அதனால் அடிக்கடி பப்பாளி சாப்பிடுங்கள்.

எழுபது அல்லது எண்பதாம் ஆண்டுகளில் கிராமங்களில் உள்ள வீடுகளில் முருங்கை வாழை, பப்பாளி, மாதுளை மற்றும் கொய்யா மரங்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் இன்று பப்பாளி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் எடைபோட்டு எடைக்கு ஏற்ப காசு நிர்ணயம்.

முன்னோர்களுக்கு எந்த பழத்தில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது நன்றாக தெரிந்தே அவற்றை வீடுகளில் நட்டு வளர்த்தனர். அந்த வகையில் இன்று பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகளை பார்க்கலாம் வாங்க.
Health Benefits of Papaya in Tamil
மலிவாக கிடைக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. அதன் இனிப்பு மற்றும் சுவைக்காக இன்று பலரும் விரும்பி உண்ணும் பழமாக பப்பாளி மாறியுள்ளது. பலருக்கு பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. பப்பாளி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எப்பின்னு பார்க்க்கலாமா?

பப்பாளியின் ஊட்டச்சத்துக்கள்

ஒரு சிறிய பப்பாளியில் (152 கிராம்) (2) உள்ளது:

கலோரிகள்: 59
கார்போஹைட்ரேட்டுகள்: 15 கிராம்
ஃபைபர்: 3 கிராம்
புரதம்: 1 கிராம்
வைட்டமின் சி: ஆர்டிஐயில் 157%
வைட்டமின் ஏ: ஆர்டிஐயில் 33%
ஃபோலேட் (வைட்டமின் B9): RDI இல் 14%
பொட்டாசியம்: RDI இல் 11%
கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் B1, B3, B5, E மற்றும் K ஆகியவையும் ஒரு குறிப்பிட்ட அளவுகளில் உள்ளன.

Health Benefits of Papaya in Tamil
பப்பாளியில் கரோட்டினாய்டுகள், ஆல்கலாய்டுகள், ஃபிளவனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மூலமாகும். மேலும் இதில் நிறைந்துள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை பராமரிப்பதுடன், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, ஃபோலேட், பொட்டாசியம், மக்னீசியம், தாமிரம் போன்றவை உள்ளது. இதில் வெறும் வயிற்றில் பப்பாளியை உட்கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை உட்கொள்வது தனித்துவமான சில நன்மைகளை அளிக்கிறது. இதில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதன் நன்மைகளைக் காணலாம்.
Health Benefits of Papaya in Tamil
செரிமானம் மேம்படும்

உடலில் செரிமான செயல்பாடு குறையும் போது பப்பாளியை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பேன் போன்ற என்சைம்கள் திறமையாக செயல்பட்டு புரத செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் அஜீரணத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.

ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்க

பப்பாளியில் காஃபிக் அமிலம், மைரிசெட்டின், வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் சக்திவாய்ந்த கலவை நிறைந்துள்ளது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாத்து ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

உடலின் நச்சுத்தன்மை வெளியேற

உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து, பப்பாளியை எடுத்துக் கொள்வது நல்லது. இது உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவுகிறது. பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடலில் இருக்கும் கழிவுகள், நச்சுக்களை அகற்ற உதவுகிறது. மேலும் பப்பாளியின் ஊட்டச்சத்துக்கள் உடல் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது.

எடை குறைய

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை உட்கொள்வது நீண்டநேரம் வயிறு நிரம்பிய உணர்வினை அளிக்கிறது. இது சரியான உடல் எடையை நிர்ணயிக்கிறது. எனவே எடை மேலாண்மையை விரும்புகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
Health Benefits of Papaya in Tamil

இரத்த சர்க்கரை அளவை சீராக்க

பப்பாளியில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. ஏனெனில் இது இரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. மேலும் கிளைசெமிக் குறியீட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கிறது.

கல்லீரலை பாதுகாக்கும்

பப்பாளி பழத்தில் சூப்பர் ஆக்சைடு டிஸ்ம்யூடேஸ் மற்றும் க்ளூடாதையோன் எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இவை கல்லீரலில் உள்ள நச்சுகளை குறைக்கின்றன.

கண் ஆரோக்யம் பேண

பப்பாளி பழத்தில் வைட்டமின் A சத்து போதுமான அளவில் உள்ளது மற்றும் கரோடினாயிட்ஸ் உள்ளது. இவை மிகவும் சிறப்பான சக்தி வாய்ந்த பொருட்கள். எனவே இவை கண்கள் மற்றும் சருமத்திற்கு நல்லது.

சிறுநீரக பாதுகாப்பு

பப்பாளி சாப்பிட்டால் யூரிக் அமிலம், யூரியா மற்றும் க்ரியேடினைன் போன்றவை இரத்தத்தில் கட்டுப்படும். எனவே சிறுநீரக கோளாறு நேர்ந்தாலும் இதை சாப்பிட சிறுநீரகம் சிறப்பாக செயல்படும்.
Health Benefits of Papaya in Tamil

ளர்சிதை மாற்றத்திற்கு உகந்தது

பப்பாளி பழம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் பருமன் இல்லாமல் போய் விடும். இதை தவிர, பப்பாளி சாப்பிட உடலில் உள்ள ட்ரை கிளிசரைட்ஸ் எனப்படும் கொழுப்பு சத்து மற்றும் உடலின் மொத்த கொலஸ்ட்ரால் அளவும் குறைந்து விடும்.

கேன்சரை எதிர்க்கும்

பப்பாளி பழத்தில் உள்ள பெக்டின், கேன்சர் சிகிச்சையில் பெரும் பங்கு வகிக்கிறது. கேன்சர் செல்களை அழிக்கும் மற்றும் கேன்சர் கட்டிகள் உடலில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதை தடுக்கும். சிகிச்சை மட்டும் அளிக்காமல், கேன்சர் வளர்ச்சியை முற்றிலுமாக அழிக்கிறது.
Health Benefits of Papaya in Tamil
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பப்பாளியில் ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி பாரசைட் மற்றும் ஆன்டி அமீபிக் தன்மைகள் இருக்கிறது. இது உடலில் ஏற்படும் பல விதமான தொற்றுக்களுக்கு தீர்வை தருகிறது. புண்களை ஆற்றும் தன்மையும் பப்பாளியில் உள்ளது. இதில் வைட்டமின் C அதிகம் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கிறது.

இவ்வாறு பல்வேறு வகையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது உடலுக்கு நன்மையளிப்பதாகஉள்ளது. இது தவிர மாதவிடாய் காலத்தில் உடலில் ஏற்படும் வலியைச் சமாளிக்க பப்பாளி சாப்பிடுவது நல்ல பலன்தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top