Close
நவம்பர் 25, 2024 4:13 காலை

ரயில் பெட்டிகளில் ஜன்னலுக்கு மேலே வரைந்திருக்கும் கோடுகளுக்கு என்ன அர்த்தம்..? தெரிஞ்சிக்கலாமா..?

மஞ்சள் நிற கோடுகள் வட்டமிட்டு காட்டபப்ட்டுள்ளது.

நாம் பலமுறை ரயிலில் பயணித்து இருப்போம். ஆனால் சில அறிவிப்புகளை எழுத்தால் கூறாமல் சில குறியீடுகள் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கும். இன்னிக்கு இதை தெரிஞ்சிக்குவோமா..?

இந்தியாவில் ஓடும் ரயில்களில் பெட்டிகளின் கடைசியில் படத்தில் காண்பது போன்ற சாய்வு கோடுகள் இருக்கும். அந்த கோடுகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? அதற்கு என்ன அர்த்தம் என்பது நம்மால் பலருக்குத் தெரியாது. இன்னிக்கு தெரிஞ்சிக்குவோமா..?

நமது வாழ்வில் நாம் ஒருமுறையாவது ரயிலில் பயணித்திருப்போம். சிலரது பயணம் தினசரி ரயில் பயணம்தான். அந்த அளவிற்கு ரயில் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. அடிக்கடி ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்னச் சின்ன விஷயங்கள் அல்லது குறியீடுகளுக்கான அர்த்தம் தெரியாமல் இருக்கும்.

அப்படியான ஒருவிஷயம் தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள். இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. அந்த கோடுகளுக்கு ஒரு பொருள் உள்ளது. இந்தியாவில் 1853ம் ஆண்டு ஏப் 16ம் தேதி துவங்கப்பட்ட ரயில் சேவை 1951ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. அன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது

அப்படி ஒரு நாள் வந்த மாற்றம் தான் இந்த மஞ்சள் நிற கோடுகள். பொதுவாக இந்தியாவில் விரைவு வண்டி, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாகத்தான் இருக்கும்.

மஞ்சள்நிற குறுக்கு கோடுகள்

ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன் பதிவில்லாத பெட்டிகளாக இருக்கும். இந்த நீல நிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் காணப்படும்.

இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என்று அர்த்தம். முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது. பிளாட்பாரத்தில் ரயில் வரும்போது பயணிகள் முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டு பிடிக்க இவ்வாறு மஞ்சள்நிற சாய்வுக்கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்

அதே போல சென்னையில் ஒடும் மின்சார ரயிலிலும் இது போன்ற கோடுகள் இருக்கும். அந்த கோடுகள் முதல் வகுப்பு பெண்களுக்கான ரயில் பெட்டிகளைக் குறிக்கிறது. இந்த தகவல் பலருக்குத் தெரியாது. இனிமேல்உங்களுக்கும் தெரிந்த விஷயம் ஆயிற்று.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top